Advertisment

10 ஆண்டுகளில் முதன்முறையாக திமுகவை ஆதரித்த இலங்கைத் தமிழ்க் கட்சிகள்.. ஸ்டாலின் ‘தலைமை’க்கு வாழ்த்து!

இலங்கையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.ஏ.சுமந்திரனும், உலகத் தமிழர் பேரவையைச் சேர்ந்த சுரேன் சுரேந்திரனும், தி.மு.க அரசைப் பாராட்டி அறிக்கை வெளியிட்டனர்.

author-image
WebDesk
New Update
mk stalin

Sri Lankan Tamil parties hail Stalin leadership after war

இலங்கைப் போர் முடிந்து ஒரு தசாப்தத்துக்கும் மேலாகியும், தீவு தேசத்தில் உள்ள தமிழ் அமைப்புக்கள், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், முதன்மையாக நாட்டிலுள்ள அனைத்து மாகாணங்களுக்கும் சமத்துவத்தை வழங்கும் இலங்கை அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு உதவி கோரி, இந்தியாவில் உள்ள கட்சிகளை அணுகியுள்ளனர்.

Advertisment

இரண்டு வாரங்களுக்கு முன்னர், கொழும்பில் உள்ள இந்திய உயர் கமிஷனருக்கு ஆறு தமிழ்க் கட்சிகளால் கடிதம் அனுப்பப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.ஏ.சுமந்திரனும், உலகத் தமிழர் பேரவையைச் சேர்ந்த சுரேன் சுரேந்திரனும், தி.மு.க அரசைப் பாராட்டி அறிக்கை வெளியிட்டனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், “இந்தியா முழுவதும் உள்ள பல தலைவர்களின் பொறாமைக்கு ஆளாகியுள்ளார்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் இந்தியக் கட்சி’ தமிழ்ச் சமூகத்துக்கு துரோகம் இழைத்ததாகக் கருதப்பட்டது. அப்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், திமுகவும் அங்கம் வகித்தது.

போர் முடிந்த 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு, இலங்கைத் தமிழ்க் கட்சிகள் தி.மு.க. அரசை பாராட்டி வெளியிட்ட முதல் அறிக்கை இது.

"சமீபத்திய வரலாற்றில் வேறு எந்தத் தமிழ்த் தலைவர்களையும் விடவும்" , உலகத் தமிழ் சமூகத்தின் பொதுவான தன்மைகளையும், ஒற்றுமையையும் மேம்படுத்த ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் உலகத் தமிழ் மன்றம் கூறியுள்ளது.

புலம்பெயர் தமிழர்களின் நலன் மற்றும் மறுவாழ்வுக்காக அர்ப்பணிப்புள்ள அமைச்சரை நியமித்தல், உலகத் தமிழ் புலம்பெயர் தினத்தை அறிவித்தல், சர்வதேச பல்கலைக்கழகங்களில் தமிழ் ஆய்வு நிறுவனம் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் டொராண்டோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைகள் போன்றவற்றை ஸ்டாலினின் சாதனைகளாகப் பட்டியலிட்டனர்.

இலங்கையில் உள்ள தமிழர்கள் "முக்கியமான கட்டத்தில்" இருப்பதாக கட்சிகள் தெரிவித்துள்ளன.

"போர் தொடர்பான பொறுப்புக்கூறல்" முன்னேற்றம் ஓரளவுக்கு இருந்தபோதிலும், -தங்கள் நிலத்தைப் பாதுகாப்பதற்கும், தங்கள் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கும் ... பரவலான இராணுவமயமாக்கலுக்கு எதிராகவும், பிராந்திய மக்கள்தொகையை மாற்றியமைக்கும் நோக்கத்தில் அரசு ஆதரவளிக்கும் முயற்சிகளுக்கு எதிராகவும், தமிழர்கள் பல இருத்தலியல் சவால்களை எதிர்கொள்கிறார்கள்.

தமிழர்கள் செறிந்து வாழும் வட இலங்கையில், சீனத் திட்டங்களுக்கான இலங்கை அரசாங்கத்தின் திட்டங்களை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுவதாக தோன்றியது.

இலங்கைத் தமிழர்களுக்கான தீர்வைக் கொண்டுவர ஸ்டாலின் இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும் என இலங்கை இராணுவக் காவலில் இருந்து காணாமல் போன முன்னாள் விடுதலைப் புலி போராளியின் மனைவியும் முன்னாள் வட மாகாண அமைச்சருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா போர்க்குற்ற விசாரணை கோரி தீர்மானம் நிறைவேற்றியது போல், ஸ்டாலினும் குரல் எழுப்பலாம்,'' என்றார்.

இல்லையெனில், தமிழ் கட்சிகளின் அறிக்கையானது "அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு ஸ்டாலினின் பங்களிப்புகளை ஆதரிப்பதற்கான ஒரு உத்தி" என்று அவர் அஞ்சினார்.

ஈழ மக்கள் புரட்சி விடுதலை முன்னணி (EPRLF), இந்திய உயர் கமிஷனருக்க்கு கடிதம் எழுதி, பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு கோரிய ஆறு கட்சிகளில் ஒன்று. அவர்கள் அனைவரும் ஸ்டாலினிடம் கேட்க விரும்புகிறோம் என்றனர். அவரை விரைவில் சந்திப்போம் என ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment