இந்திய சினிமாவின் முதல் 'லேடி சூப்பர் ஸ்டார்' ஸ்ரீதேவியின் உடல் தகனம்!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் அஞ்சலி செலுத்துவதற்காக காலை 9.30 மணிக்கு செலபிரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இந்திய பெண் சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி, கடந்த 24ம் தேதி துபாயில் எதிர்பாராத விதமாக மரணம் அடைந்தார். அவரது உடல் நேற்று மும்பை கொண்டு வரப்பட்டது. இன்று காலை 9.30 மணியிலிருந்து செலபிரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று மாலை 05.20 மணிக்கு ஸ்ரீதேவியின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய திரையுலகின் பெண் சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி. தமிழகத்தில் விருந்துநகர் மாவட்டத்தில் பிறந்தவர். குழந்தை நட்சத்திரமாக நடித்து, தமிழ் உள்பட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்தவர். பின்னர் இந்தியில் நுழைந்து கனவு தேவதையாக வலம் வந்தவர்.

கடந்த 24ம் தேதி துபாய்க்கு உறவினர் இல்லத்திருமணத்தில் கலந்து கொள்ள சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர், ஹோட்டல் பாத் டப்பில் விழுந்து உயிர் இழந்தார். இந்நிலையில் அவரது உடல் மும்பையில் உள்ள செலபிரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

மாலை 05.22 : இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் நடிகை ஸ்ரீதேவியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

மாலை 4.55 : சோனம் கபூர் வில்லே பார்லே மயானத்திற்கு வந்தார்.

மாலை 4.40 : அமிதாப் பச்சன் வில்லே பார்லே மயானத்தை வந்தடைந்தார்.

மாலை 4 : வில்லே பார்லே மயானத்திற்கு ஸ்ரீதேவியின் உடல் வந்தடைந்தது. மகாராஷ்டிர அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்று வருகிறது. திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி.

பிற்பகல் 2.55 : ரசிகர்கள் வெள்ளத்தில் நீந்தியபடி ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம், மும்பையின் வில் பார்லி (மேற்கு) பகுதியை கடந்தது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பு.

பிற்பகல் 2.35 : ஸ்ரீதேவிக்கு மாநில போலீஸாரின் இறுதி அணி வகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது.

 பிற்பகல் 2.10 : செலபிரேஷன் ஸ்போர்ஸ்ட் கிளப்பில் இருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்து ஸ்ரீதேவியின் உடல் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அந்தேரியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள வில்லே பார்லே பகுதி மயானத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. நடிகர் – நடிகைகள், ரசிகர்கள் பங்கேற்பு.

நண்பகல் 1.50 : நடிகர்கள் சிரஞ்சீவி, ஜான் ஆப்ரஹாம், சரா அலி கான் ஆகியோர் வருகை.

நண்பகல் 1.25 : நடிகர் அர்ஜுன் கபூர் வருகை.

நண்பகல் 12.55 : நடிகர்கள் விவேக் ஓபராய், ராஜ்குமார் ராவ், டிம்பிள் கபாடியா ஆகியோர் வருகை.

நண்பகல் 12.36 : நடிகர் ஷாகித் கபூர் மற்றும் மிரா ராஜ்புத் வருகை.

நண்பகல் 12. 33 : நடிகைகள் தீபிகா படுகோனே, ரேகா, மனீஷ் மல்ஹோத்ரா, ஆதித்யா ராய் ஆகியோர் வருகை.

நண்பகல் 12.15 : நடிகைகள் ரவீனா டாண்டன், ஷபானா ஆஸ்மி மற்றும் எழுத்தாளரும், பாடலாசிரியருமான ஜாவித் அக்தர் வருகை.

காலை 11.45 : நடிகையும், தயாரிப்பாளருமான ஜெயா பச்சன், நடிகர் அஜய் தேவ்கன் வருகை.

காலை 11.15 : இயக்குநர் இம்தியாஸ் அலி, நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், நடன இயக்குநர் சரோஜ் கான் ஆகியோர் வருகை.

காலை 11.10 : நடிகர் அஜய் தேவ் கான், நடிகை காஜல் வருகை.

காலை 11.05 : நடிகை மாதுரி திட்சித் வருகை

காலை 11 : நடிகை தபு வருகை.

காலை 10.40 : முன்னாள் உலக அழகியும், இந்தி நடிகையுமான ஐஸ்வரியா பச்சன் வருகை.

காலை 10.30 : ஜெயபிரதா வருகை.

காலை 10.25 : சஞ்சை கபூர் வருகை.

காலை 10.20 : ஹேமமாலினி, இசா டியோல் ஆகியோர் அஞ்சலி செலுத்த வந்தனர்.

காலை 9.51 : நடிகை சோனம் கபூர் அஞ்சலி செலுத்த வந்தார்.

காலை 9.30 : மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் அஞ்சலி செலுத்துவதற்காக செலபிரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்துக்கு கொண்டு வரப்பட்டது.

×Close
×Close