/indian-express-tamil/media/media_files/2025/07/28/srinagar-encounter-2025-07-28-15-30-07.jpg)
3 terrorists killed in forests on Srinagar outskirts
ஸ்ரீநகரின் புறநகர்ப் பகுதியான தச்சிகாம் வனப்பகுதியில் (Dachigam forest area) இந்திய ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று இந்திய ராணுவம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது
ஹார்வானின் உயரமான பகுதிகளில் தேடுதல் மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே முதல் கட்ட துப்பாக்கிச் சண்டை தொடங்கியது. “கடுமையான துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது,” என்று ஸ்ரீநகரில் உள்ள ராணுவத்தின் 15 கார்ப்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் அடையாளம் இன்னும் பாதுகாப்புப் படையினரால் வெளியிடப்படவில்லை. இது குறித்த மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
முன்னதாக, காஷ்மீர் பிராந்தியத்தில் கடைசியாக மே மாதம் ஷோபியான் மற்றும் அவந்திபோரா தென் காஷ்மீர் பகுதிகளில் பெரிய மோதல்கள் நடந்தன, இந்த இரண்டு மோதல்களிலும் தலா மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.