ஸ்ரீநகரில் உள்ள சுற்றுலா வரவேற்பு மையம் (டி.ஆர்/சி) அருகே ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கையெறி குண்டு வெடித்ததில் 10 பேர் காயமடைந்தனர்.
ஆங்கிலத்தில் படிக்க: Grenade attack near busy Srinagar Sunday market injures 10
ஞாயிற்றுக்கிழமை சந்தை நடைபெறும் மக்கள் அதிகம் கூடும் பகுதியில் இந்த கையெறி குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது.
போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், ரெசிடென்சி சாலையில் உள்ள டி.ஆர்.சி அருகே மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எஃப்) வீரர்கள் மீது கையெறி குண்டு வீசப்பட்டது. இலக்கு தவறி விழுந்த கையெறி குண்டு தெருவோர வியாபாரிகளின் வண்டியில் விழுந்து வெடித்ததில் 6 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகளின் கூட்டுக் குழு, தாக்குதலுக்குப் பின்னால் இருந்தவர்களைக் கைது செய்வதற்காக அந்தப் பகுதியை சுற்றி வளைத்தது.
டி.ஆர்.சி முதல் லால் சௌக் வரையிலான ரெசிடென்சி ரோடு ஸ்ரீநகரின் ஞாயிறு சந்தையாக நடைபெறுகிறது.
ஸ்ரீநகரில் கடந்த ஓராண்டில் நடந்த முதல் கையெறி குண்டுவெடிப்பு இதுவாகும். ஸ்ரீநகரின் கன்யார் பகுதியில் என்கவுன்டரில் கொல்லப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா கமாண்டர், உஸ்மான் லஷ்கரி என காவல்துறை அடையாளம் கண்ட ஒரு நாள் கழித்து இந்த சம்பவம் நடந்துள்ளது. நான்கு பாதுகாப்புப் பணியாளர்கள் - ஜம்மு காஷ்மீர் போலீஸ் மற்றும் சி.ஆர்.பி.எஃப்-ஐச் சேர்ந்த தலா 2 பேர் - ஒரு நாள் நீடித்த என்கவுண்டரில் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“