Advertisment

எங்க ஏரியாவில் பறக்க கூடாது; பாகிஸ்தானால் ரூட்டை மாற்றிய இந்திய விமானம்

பாகிஸ்தான் வான்வெளி பயன்படுத்த விதித்த தடையால், கோ பர்ஸ்ட் விமானம் ராஜஸ்தான் மற்றும் குஜராத் வழியாக ஓமன் வான்வெளியில் பறந்து சார்ஜாவில் தரையிறங்கிறது.

author-image
WebDesk
New Update
எங்க ஏரியாவில் பறக்க கூடாது; பாகிஸ்தானால் ரூட்டை மாற்றிய இந்திய விமானம்

ஸ்ரீநகர்-சார்ஜா இடையே கோ பர்ஸ்ட் நேரடி விமான சேவையை, அக்டோபர் 23 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இந்த விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளி வழியாக சென்று வந்தன.

Advertisment

இந்நிலையில், இந்த விமானத்திற்கு தங்களது வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் சிவில் விமான போக்குவரத்து திடீரென தடை விதித்துள்ளது. இதன் காரணமாக, விமானம் வேறு வான்வெளியை பயன்படுத்துவதால் பயண தூரம் அதிகரித்துள்ளதாக இந்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விமான சேவை தொடங்கி 10 நாள்களுக்கு பிறகு, பாகிஸ்தான் போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த மெஹபூபா முப்தி, " விமான சேவையைத் தொடங்குவதற்கு முன் எந்த அடிப்படை வேலைகளையும் செய்யவில்லை என மத்திய அரசை குற்றம் சாட்டியுள்ளார்.

பாகிஸ்தானின் இந்த முடிவுக்கு மத்திய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை. பாகிஸ்தான் முடிவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கோ ஏர் இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை

விமான நிபுணர்களின் கூற்றுப்படி, கோ பாஸ்ட் விமானம் பாகிஸ்தானுக்குள் நுழைந்து லாகூருக்கு மேலே பறந்து, ஷார்ஜாவில் தரையிறங்குவதற்கு முன் ஈரான் வான்வெளியிலும் பயணிக்கிறது. இந்த பயண நேரம் 3 மணி நேரம் 40 நிமிடங்கள் ஆகும்.

ஆனால், தற்போது பாகிஸ்தான் விதித்த தடையால், கோ பர்ஸ்ட் விமானம் ராஜஸ்தான் மற்றும் குஜராத் வழியாக ஓமன் வான்வெளியில் பறந்து சார்ஜாவில் தரையிறங்கிறது. இதனால், தற்போது பயண நேரம் கூடுதலாக ஒன்றரை மணி நேரம் அதிகரித்து 4 மணி நேரம் 20 நிமிடங்களாக உள்ளது.

கோ பர்ஸ்ட் முன்பு கோஏர் என அழைக்கப்பட்டது. பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்தி, அக்டோபர் 23 ஆம் தேதி முதல் ஸ்ரீநகரில் இருந்து ஷார்ஜாவிற்கு ஐந்து விமானங்களை இயக்கி வருகிறது.

முன்னதாக, 2009இல் ஜம்மு காஷ்மீர் சார்ஜா இடையே முதன்முதலாக ஏர் இந்தியா எகஸ்பிரஸ் விமான சேவை தொடங்கப்பட்டது. ஆனால், பயணிப்போர் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததால், விமான சேவை நிறுத்தப்பட்டது. அப்போதும், பாகிஸ்தான் தனது வான்வெளியை பயன்படுத்த தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

கோ பர்ஸ்ட் சிஇஓ கவுசிக் கோனா பேசுகையில், "ஜம்மு காஷ்மீரை ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் இணைக்கும் முதல் விமான நிறுவனம் என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இரு பிராந்தியங்களுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் சுற்றுலா பரிமாற்றத்தில் இந்த சேவை முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவித்தார்.

பாகிஸ்தானின் நடவடிக்கையைத் தொடர்ந்து, முன்னாள் ஜே & கே முதல்வர் உமர் அப்துல்லா ட்விட்டரில், இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. 2009-2010இல் ஸ்ரீநகரில் இருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கும் பாகிஸ்தான் இதையே செய்தது. கோ ப்ர்ஸ்ட் விமானம் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க அனுமதிக்கப்படுவது, இருதரப்பில் இடையிலான உறவு விரிசலை குறைக்கும் என நம்பினேன். ஆனால், அது நடைபெறவில்லை" என தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Amit Shah Pakistan Flight
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment