Srinivas reddy TSRTC employee set himself ablaze saturday died : தெலுங்கானா மாநில போக்குவரத்து கழகமான டி.எஸ்.டி.ஆர்.சியை அரசின் ஒரு அங்கமாக இணைக்க வேண்டும் என்றும், சம்பளம், வேலைநியமனத்தில் ஒழுங்குமுறையை கொண்டு வர வேண்டும் என 47 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் அக்டோபர் 5ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிக்கு திரும்பவில்லை என்றால் எந்த நிபந்தனையும் இல்லாமல் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் புதிய ஊழியர்கள் (சங்கத்தில் இல்லாதவர்கள்) நியமிக்கப்படுவார்கள் என்றும் கே. சந்திரசேகர் ராவ் எச்சரிக்கை செய்தார்.
மேலும் படிக்க : போராட்டத்தில் ஈடுபட்ட 47 ஆயிரம் நபர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள்... கே.சி.ஆர் அதிரடி!
ஆர்.டி.சி இல்லாத மாநிலங்களைக் காட்டிலும் தெலுங்கானா ஆர்.டி.சியை மாநில அரசு சிறப்பாக கவனித்தது. தசராவிற்கு சொந்த ஊர் செல்ல மக்கள் விரும்பும் நேரத்தில் மிகவும் மோசமான முடிவுகளை நீங்கள் எடுத்துவிட்டீர்கள் என்று கடுமையாக விமர்சனம் செய்தார் அவர். இந்நிலையில் தொடர் போராட்டத்தின் அழுத்தம் காரணமாக நேற்று (12/10/2019) கம்மம் பகுதியில் டி.எஸ்.ஆர்.டி.சி ட்ரைவர் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இறந்த போன நபரின் பெயர் ஸ்ரீநிவாஸ் ரெட்டி, அவர் கம்மம் டிபோட்டில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரை அப்பலோ டி.ஆர்.டி.ஓ மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரின் தற்கொலைக்கு நியாயம் கேட்டு அந்த மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் டி.எஸ்.ஆர்.டி.சி. ஊழியர்கள். போராட்டத்தால் மனம் உடைந்து காணப்பட்டார் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.