கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு மாநிலங்களில் நடைபெற இருந்த பொதுத்தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று கர்நாடகாவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறுகிறது. தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அதற்கு பதிலாக காலாண்டு மற்றும் அரையாண்டில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கொரோனா வைரஸ் தீவிரமடைந்திருக்கும் நிலையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்று முதல் நடைபெற்று வருகிறது. அனைத்து மாணவர்களின் பாதுகாப்பினையும் உறுதி செய்யும் வகையில் கொரோனா தடுப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 40 பேர் வரை அமரக்கூடிய தேர்வு அறையில் வெறும் 18 பேர் மட்டுமே அமர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூருவில் இருக்கும் பள்ளி வளாகத்தில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும் காட்சிகள்
சுமார் 2,400 மையங்களில் 8.50 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வுகளை எழுத உள்ளனர். கொரோனா பயம் காரணமாகவும், நோய் தொற்று அபாயம் காரணமாகவும் தேர்வினை எழுத முடியாத மாணவர்கள் துணைத் தேர்வுகள் எழுதலாம் என்று அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil