டெல்லி கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் மரணம்: கூடுதல் ரயில் டிக்கெட்டுகள் விற்பனை தான் விபத்துக்கு காரணமா?

புது தில்லி ரயில் நிலையத்தில் ஒவ்வொரு நாளும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சராசரியாக 7,000 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரியவந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Delhi Railway

உத்திரபிரதேசத்தில் நடைபெற்று வரும் கும்பமேளா நிகழ்வில் புனித நீராட செல்வதற்காக டெல்லி ரயில் நிலையில், ஆயிரக்கணக்கான பயணிகள் நேற்று முன்தினம் (பிப்ரவரி 15) காத்திருந்த நிலையில், அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 18 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் பலர் இந்த சம்பவத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர்.

Advertisment

Read In English: In two-hour period before Delhi stampede, a telltale sign: 2,600 extra general tickets sold

டெல்லி ரயில் நிலையத்தில், பொது வகுப்பு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் அமைப்பு (யூடிஎஸ்) சனிக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை வழக்கத்தை விட 2,600 டிக்கெட்டுகள் கூடுதலாக முன்பதிவு செய்யப்பட்டதாகக் காட்டுகிறது. அதனைத் தொடர்ந்து, இரவு 9 மணி முதல் இரவு 9.20 மணி வரை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பேர் மரணமடைந்துள்ளனர்.

புது தில்லி ரயில் நிலையத்தில் ஒவ்வொரு நாளும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சராசரியாக 7,000 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரியவந்துள்ளது. இருப்பினும், சம்பவம் நடந்த நாளில், அந்த நேரத்தில் வழக்கத்திற்கு மாறாக 9,600 க்கும் மேற்பட்ட பொது வகுப்பு டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
சனிக்கிழமை (பிப் 15) மொத்தமாக, 54,000 க்கும் மேற்பட்ட பொது வகுப்பு டிக்கெட்டுகள் யூடிஎஸ் மூலம் முன்பதிவு செய்யப்பட்டன.

Advertisment
Advertisements

பிப்ரவரி 15 அன்று நடைமேடையில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் இருந்தனர் என்பதில் சந்தேகமில்லை என்றாலும், பிப்ரவரி 8 மற்றும் ஜனவரி 29 அன்று யூடிஎஸ் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட மொத்த டிக்கெட்டுகளை விட இது இன்னும் குறைவாகவே உள்ளது. பிப்ரவரி 8-ந் தேதி 54,660 மற்றும் மற்றும் ஜனவரி 29-ந் தேதி 58,000 பொது வகுப்பு டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன. இதனால் விபத்து நடந்தபோது கூட்டத்தை சரியாக சமாளித்திருக்கலாம், ”என்று ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இது குறித்து மற்றொரு அதிகாரி கூறுகையில், உத்திரபிரதேசத்தில் நடைபெற்று வரும் மஹா கும்பமேளாவின் போது திரிவேணி சங்கமத்தில் நீராடுவதற்காக அதிக கூட்டம் இருப்பதால், முன்பதிவு செய்யப்பட்ட மொத்த டிக்கெட்டுகளில் உண்மையான கூட்டத்தின் தெளிவான படத்தைக் கொடுக்க முடியாத நிலை உள்ளது. “தற்போது, மஹா கும்பமேளா காரணமாக, இந்திய ரயில்வே அமைச்சகம் பல முக்கிய வழித்தடங்களில் டிக்கெட்டுகளை சரிபார்க்கவில்லை. இதன் காரணமாக அதிக மக்கள் கூட்டம் உள்ளது. மக்கள் ரயிலுக்குள் நிற்கக்கூட போராடுகிறார்கள்.

இதுபோன்ற சூழ்நிலையில், பொது வகுப்பில் உள்ளவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்தார்களா இல்லையா என்பதை சரிபார்க்க முடியாது. அதே சம்யம் இந்த யுடிஎஸ் டிக்கெட்டின் எண்ணிக்கையில் உள்ளதை விட, உண்மையான கூட்டம் மிக அதிகமாக இருந்திருக்கலாம். இந்த இரண்டு முக்கியமான நேரங்களுக்கு இடையில் யுடிஎஸ் மூலம் அதிக டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டதிலிருந்து ஒரு தகவலை பெற்று ரயில்வே நிர்வாகம் முன்னெச்சரிக்கையாக இருந்திருந்தால், இந்த சம்பவத்தைத் தவிர்த்திருக்கலாம் என்று ஒரு அதிகாரி கூறியுள்ளார்.

ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ரயில்களை மாற்று பாதையில் இயக்க ரயில் நிலைய மேலாளர் ஒரு முடிவை எடுக்கிறார். நேற்றைய சம்பவத்தில், பிரயாக்ராஜ் சிறப்பு ரயில் அறிவிப்பு மிக முக்கியமானது. ஆரம்பத்தில், கும்பமேளா பயணிகள் இரவு 8.05 மணிக்கு பிளாட்பாரம் எண் 12-லிருந்து புறப்பட திட்டமிடப்பட்டிருந்த சிவகங்கா எக்ஸ்பிரஸில் ஏற முயன்றனர். ஆனால் கூட்ட நெரிசல் காரணாக பலரால் உள்ளே செல்ல முடியவில்லை, இதனால் அவர்கள் அதே பிளாட்பாரத்தில் காத்திருந்தனர்.

மறுபுறம், பிளாட்பாரம் எண் 14-ல், பொது வகுப்பு பயணிகள் இரவு 9.05 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்த மகத் எக்ஸ்பிரஸில் ஏறிக்கொண்டிருந்தனர். அந்த ரயிலிலும்  அனைத்து பயணிகளும் உள்ளே செல்ல முடியவில்லை என்பதால் பலரும் ரயில் நிலையத்தின் பிளாட்பாரமில் காத்திருந்தனர். சிவகங்கா எக்ஸ்பிரஸின் பிரயாக்ராஜ் பயணிகள் அங்கு காத்திருந்ததை மனதில் கொண்டு, பிளாட்பாரம் எண் 12-க்கு இரவு 8.50 மணிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டது.

“சம்பவம் எப்படித் தவிர்க்கப்பட்டிருக்கும் என்பதற்கு தெளிவான பதில் இல்லை. இருப்பினும், ரயில்கள் புறப்பட்ட பிறகு 14 அல்லது 15வது நடைமேடையில் சிறப்பு ரயில் வரவழைக்கப்பட்டிருந்தால், இந்த சம்பவம் நடந்திருக்காது, ஏனெனில் மகத் எக்ஸ்பிரஸில் ஏற விரும்பிய மீதமுள்ள பயணிகள் அதே நடைமேடையில் சிறப்பு ரயிலில் ஏறியிருக்க முடியும். பிளாட்பாரமில், போதுமான எண்ணிக்கையிலான பணியாளர்கள் இருந்திருந்தால், பயணிகளுக்கு தெளிவான அறிவிப்பு இருந்திருந்தால் இவ்வளவு பெரிய அளவிலான துயரத்தைத் தவிர்த்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், கூட்ட நெரிசல் ஏற்பட்ட நேரத்தில் புது தில்லி ரயில் நிலையத்தின் 16 பிளாட்பாரம்களில் சுமார் 60 ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) பணியாளர்களும், 20 டெல்லி காவல்துறையினரும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த அதிகாரிகள் சனிக்கிழமை தங்கள் வழக்கமான பணிகளில் இருந்தனர், பெருகிவரும் கூட்டம் குறித்து ரயில்வே நிர்வாகமத் அவர்களிடம் எந்த எச்சரிக்கையையும் பகிர்ந்து கொள்ளவில்லை என்று டெல்லி காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

கடந்த காலங்களில், 2004 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் பண்டிகை காலங்களில் நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவங்களுக்குப் பிறகு, ஹோலி, தீபாவளி மற்றும் சத் பூஜையின் போது அரசாங்கம் கூடுதல் பணியாளர்களை அனுப்பத் தொடங்கியது. சமீபத்திய கூட்ட நெரிசலுக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை, பிரயாக்ராஜில் மகா கும்பமேளா முடியும் வரை கூட்டத்தை நிர்வகிக்க, விரைவு நடவடிக்கைப் படை உட்பட எட்டு கம்பெனி துணை ராணுவப் படைகள், ஆர்.பி.எஃப் மற்றும் டெல்லி காவல்துறையின் கூடுதல் பாதுகாப்புப் பணியாளர்களுடன் நிறுத்தப்பட்டன.

குறிப்பாக பிரயாக்ராஜுக்குச் செல்லும் ரயில்கள் வழக்கமாக புறப்படும் 12, 13, 14, 15 மற்றும் 16 பிளாட்பாரங்களில் அவர்கள் முதன்மையாக நிறுத்தப்பட்டனர். புது தில்லி ரயில் நிலையத்தில் ஆர்.பி.எஃப் மற்றும் ஜி.ஆர்.பி படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரயாக்ராஜ் நோக்கிச் செல்லும் அனைத்து சிறப்பு ரயில்களும் பிளாட்பாரம் எண் 16-ல் இருந்து இயக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே பிரயாக்ராஜுக்குச் செல்ல விரும்பும் அனைத்து பயணிகளும் நிலையத்தின் அஜ்மேரி கேட் பக்கத்திலிருந்து வந்து செல்ல வேண்டும்.

நேற்றைய துரதிர்ஷ்டவசமான சம்பவம் தொடர்பாக இந்திய ரயில்வேக்கு இன்று மாலை 5 மணிக்குள் ரயில்வே ஹெல்ப்லைன் எண் 139 இல் 130 க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்தன, ”என்று ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். மக்கள் கூட்டத்தை நிர்வகிக்க புது தில்லி ரயில் நிலையத்தில் முன்னர் நியமிக்கப்பட்டிருந்த ஆறு ஆய்வாளர்களையும் டெல்லி காவல்துறை அழைத்துள்ளது.

New Delhi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: