Advertisment

கொலீஜியத்தின் 19 பரிந்துரைகளை திருப்பி அனுப்பிய மத்திய அரசு; 10 பெயர்களை மீண்டும் வலியுறுத்திய உச்ச நீதிமன்றம்

கொலீஜியம் முதலில் அனுப்பிய பெயர்களில் ஒன்பது நிலுவையில் உள்ளது; திருப்பிய அனுப்பிய 10 பேரில் ஐந்து பேர் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள்

author-image
WebDesk
New Update
Forced religious conversion very serious matter

Apurva Vishwanath

Advertisment

நீதிபதிகள் நியமனம் தொடர்பாக நீதித்துறையுடன் மோதலுக்கு களம் அமைத்துள்ள நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்ற கொலீஜியம் அளித்த நிலுவையிலுள்ள 21 பரிந்துரைகளில் 19 பரிந்துரைகளை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிந்துள்ளது.

நவம்பர் 28-ம் தேதி நீதிபதிகள் நியமனங்கள் தொடர்பான உச்ச நீதிமன்ற விசாரணைக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்தப் பரிந்துரைகள் திரும்பப் பெற்றதாகத் தெரிகிறது. கொலீஜியத்தால் மீண்டும் வலியுறுத்தப்பட்ட பிறகு நிலுவையில் இருந்த 10 பெயர்களும், முதல் பரிந்துரைக்குப் பிறகு நிலுவையில் உள்ள 9 பெயர்களும் இதில் அடங்கும்.

இதையும் படியுங்கள்: தேர்தல் பத்திரங்கள் விற்பனையில் மும்பை முன்னிலை; பணமாக்குவதில் டெல்லி முதலிடம்: ஆர்.டி.ஐ

மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ட்விட்டர் பதிவில் இரண்டு பரிந்துரைகள் ஏற்கப்பட்டுள்ளன என்பது தெரிகிறது.

பம்பாய் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக வக்கீல்கள் சந்தோஷ் கோவிந்த் சப்பல்கோன்கர் மற்றும் மிலிந்த் மனோகர் சதாயே ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் பெயர்களை செப்டம்பர் 12ம் தேதி கொலீஜியம் பரிந்துரை செய்தது.

கொலீஜியத்தின் மறுபரிசீலனைக்குப் பிறகு திருப்பி அனுப்பப்பட்ட 10 பெயர்களில் ஐந்து பெயர்கள் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கானது; இரண்டு பெயர்கள் கல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கானது; இரண்டு பெயர்கள் கேரள உயர் நீதிமன்றத்திற்கானது; மற்றும் ஒரு பெயர் கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கானது.

செப்டம்பர் 26-ம் தேதியன்று அளித்த கொலீஜியம் முடிவின்படி, பம்பாய் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபாங்கர் தத்தாவை உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பரிந்துரைக்கும் முடிவும் அரசாங்கத்திடம் நிலுவையில் உள்ளது.

உயர் நீதிமன்றங்களுக்கு கொலீஜியத்தால் மீண்டும் வலியுறுத்தப்பட்ட 10 பரிந்துரைகள்:

அலகாபாத் உயர் நீதிமன்றம்

ரிஷாத் முர்தாசா; 24/08/2021 அன்று பரிந்துரைக்கப்பட்டது; 14/07/2022 அன்று மீண்டும் வலியுறுத்தப்பட்டது

ஷிஷிர் ஜெயின்; 24/08/2021 அன்று பரிந்துரைக்கப்பட்டது; 14/07/2022 அன்று மீண்டும் வலியுறுத்தப்பட்டது

துருவ் மாத்தூர்; 24/08/2021 அன்று பரிந்துரைக்கப்பட்டது; 14/07/2022 அன்று மீண்டும் வலியுறுத்தப்பட்டது

விம்லேந்து திரிபாதி; 24/08/2021 அன்று பரிந்துரைக்கப்பட்டது; 14/07/2022 அன்று மீண்டும் வலியுறுத்தப்பட்டது

மனு கரே; 06/10/2021 அன்று பரிந்துரைக்கப்பட்டது; 14/07/2022 அன்று மீண்டும் வலியுறுத்தப்பட்டது

கல்கத்தா உயர் நீதிமன்றம்

அமிதேஷ் பானர்ஜி; 24/07/2019 அன்று பரிந்துரைக்கப்பட்டது; 01/09/2021 அன்று மீண்டும் வலியுறுத்தப்பட்டது

சாக்யா சென்; 24/07/2019 அன்று பரிந்துரைக்கப்பட்டது; 08/10/2021 அன்று மீண்டும் வலியுறுத்தப்பட்டது

கர்நாடக உயர் நீதிமன்றம்

நாகேந்திர ராமச்சந்திர நாயக்; 03/10/2019 அன்று பரிந்துரைக்கப்பட்டது; 02/03/2021 மற்றும் 01/09/2021 அன்று மீண்டும் வலியுறுத்தப்பட்டது

கேரள உயர் நீதிமன்றம்

சஞ்சீதா கல்லூர் அரக்கல்; 01/09/2021 அன்று பரிந்துரைக்கப்பட்டது; 11/11/2021 அன்று மீண்டும் வலியுறுத்தப்பட்டது

அரவிந்த குமார் பாபு தவரக்கட்டில்; 01/09/2021 அன்று பரிந்துரைக்கப்பட்டது; 11/11/2021 அன்று மீண்டும் வலியுறுத்தப்பட்டது

உயர்நீதிமன்ற நீதிபதிகளாக முதன்முறையாகப் பரிந்துரைக்கப்பட்ட 9 பேரின் பெயர்கள்:

கணேஷ் ராம் மீனா; ராஜஸ்தான் உயர் நீதிமன்றம்; 01/09/2021 அன்று பரிந்துரைக்கப்பட்டது

மனீஷ் சர்மா; ராஜஸ்தான் உயர் நீதிமன்றம்; 06/10/2021 அன்று பரிந்துரைக்கப்பட்டது

சௌரப் கிர்பால்; டெல்லி உயர் நீதிமன்றம்; 11/11/2021 அன்று பரிந்துரைக்கப்பட்டது

மிர்சா சைபுல்லா பைக்; தெலுங்கானா உயர் நீதிமன்றம்; 01/02/2022 அன்று பரிந்துரைக்கப்பட்டது

சோமசேகர் சுந்தரேசன்; பம்பாய் உயர் நீதிமன்றம்; 16/02/2022 அன்று பரிந்துரைக்கப்பட்டது

ஆர் ஜான் சத்யன்; சென்னை உயர் நீதிமன்றம்; 16/02/2022 அன்று பரிந்துரைக்கப்பட்டது

அப்துல் கனி அப்துல் ஹமீது; சென்னை உயர் நீதிமன்றம்; 16/02/2022 அன்று பரிந்துரைக்கப்பட்டது

சுமன் பட்டநாயக்; ஒரிசா உயர் நீதிமன்றம்; 25/07/2022 அன்று பரிந்துரைக்கப்பட்டது

ஹர்ப்ரீத் சிங் ப்ரார்; பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம்; 25/07/2022 அன்று பரிந்துரைக்கப்பட்டது

முன்னதாக, நவம்பர் 11 அன்று, நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, நீதித்துறை செயலாளர் மற்றும் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் (நிர்வாகம் மற்றும் நியமனம்) ஆகியோருக்கு கொலீஜியம் பரிந்துரைகளை அரசாங்கம் ஏன் இழுத்தடிக்கிறது என்பது குறித்து நவம்பர் 28ஆம் தேதிக்கு முன் பதிலளிக்க வேண்டும் என்ற "எளிய அறிவிப்பை" வெளியிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியாக உள்ள நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், இந்திய தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான கொலீஜியத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளார்.

வழக்கமாக, கொலிஜியம் தனது பரிந்துரையை மீண்டும் வலியுறுத்தினால், அதை ஏற்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது. கொலீஜியம் பரிந்துரைகளை மீண்டும் வலியுறுத்துவது பற்றி நடைமுறைக் குறிப்பாணை (MoP) குறிப்பாகப் பேசவில்லை என்றாலும், “நியமன விவகாரத்தில் குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்கும் பிரதமருக்கு இந்திய தலைமை நீதிபதியின் பரிந்துரையை, மத்திய சட்டம், நீதி மற்றும் நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர், முடிந்தவரை விரைவாக, குறிப்பாக 3 வாரங்களுக்குள் செயல்படுத்துவார்” என்று குறிப்பாணை கூறுகிறது.

கொலீஜியம் அமைப்பு 1993 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் உச்ச நீதிமன்றத்தால் அரசியலமைப்பு விதிகளின் விளக்கங்கள் மூலம் உருவானது, அதாவது இரண்டாவது நீதிபதிகள் வழக்கு (உச்ச நீதிமன்ற பதிவுப்பெற்ற வழக்கறிஞர்கள் சங்கம் Vs யூனியன் ஆஃப் இந்தியா, 1993) மற்றும் மூன்றாவது நீதிபதிகள் வழக்கு (அரசியலமைப்பின் 143 வது பிரிவின் கீழ் "ஆலோசனை" என்ற வார்த்தையின் பொருள் குறித்து 1998 ஆம் ஆண்டில் ஜனாதிபதி கே.ஆர் ​​நாராயணன் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பிய ஜனாதிபதி குறிப்பு).

உயர் நீதித்துறையில் நீதிபதிகளை நியமனம் செய்வதற்கும் இடமாற்றம் செய்வதற்கும் கொலீஜியம் அமைப்பை வகுத்த இரண்டாவது நீதிபதிகள் வழக்கில், தலைமை நீதிபதி தனது இரண்டு மூத்த சக நீதிபதிகளுடன் கலந்தாலோசித்து பரிந்துரையை வழங்க வேண்டும் என்றும், மற்றும் பரிந்துரையானது பொதுவாக நிர்வாகத்தால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது. பரிந்துரைக்கப்பட்ட பெயருக்கு ஆட்சேபனை இருந்தால், இந்த விஷயத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கொலீஜியத்திடம் கேட்பது நிர்வாகத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்தாலும், மறுபரிசீலனையில், கொலிஜியம் பரிந்துரையை மீண்டும் வலியுறுத்தினால், நிர்வாகம் நியமனம் செய்ய கடமைப்பட்டது என்று அது கூறியது.

மூன்றாவது நீதிபதிகள் வழக்கு, இந்திய தலைமை நீதிபதி மற்றும் அவரது நான்கு மூத்த நீதிபதிகளால் பரிந்துரைக்கப்பட வேண்டும், என இருவருக்கு பதிலாக நான்கு பேராக பரிந்துரைக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள், எந்த உயர் நீதிமன்றத்திற்கு உத்தேச பெயர் வந்ததோ, அவர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் அது கூறியது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Supreme Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment