Advertisment

கொரோனாவை தடுக்க “தீவிரம் காட்டும்” மாநில அரசுகள்; 11 மாநிலங்கள் குறித்து மத்திய அரசு கவலை

பலவீனமான சுகாதார உள்கட்டமைப்புடன் கிராமப்புறங்களில் தொற்று பரவுவது சுகாதார அமைப்பை மூழ்கடிக்கும் என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு தெரிவித்தது.

author-image
WebDesk
New Update
States start moving to contain surge, Centre says 11 States/ UTs are of ‘grave concern’

States start moving to contain surge, Centre says 11 States/ UTs are of ‘grave concern’ : மத்திய அரசு 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனோ தொற்று பரவும் விகிதம் கவலை அளிக்கிறது என்று கூறிய அதே நாளில் பல்வேறு மாநில அரசுகள் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர மக்கள் நடமாட்டம் குறித்து பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது.

Advertisment

மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி கடந்த 14 நாட்களில் 90% தொற்று மற்றும் 90.5% சதவீத உயிரிழப்பு இந்த 10 மாநிலங்களில் அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, கேரளா, சத்தீஷ்கர், சண்டிகர், குஜராத், மத்திய பிரதேசம், தமிழ்நாடு, டெல்லி மற்றும் ஹரியானா மாநிலங்களில் கடந்த ஆண்டு இருந்த கொரோனா தொற்றின் உச்சம் அல்லது அதற்கு நிகரான அளவில் தற்போது புதிய நோய்த்தொற்றுகள் உருவாகி உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் நிலைமை மிகவும் கவலை அளிப்பதாக அது கூறியுள்ளது.

மும்பையில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மக்களிடம் பேசிய போது ஊரடங்கு தொடர்பாக அறிவிப்பதை நிறுத்திவிட்டார், ஆனால் நிபுணர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் அடுத்த இரண்டு நாட்களில் ஒரு முடிவை எடுக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்தார்.

வெள்ளிக்கிழமை அன்று புதிதாக 47,887 நபர்களுக்கு மகாராஷ்ட்ராவில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று கடந்த ஆண்டு ஆரம்பித்த சமயத்தில் இருந்து தற்போது பதிவானது தான் மிகவும் அதிகமானது. தற்போது வரை அம்மாநிலத்தில் 29.04 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 3.89 லட்சம் பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே நிலை அதிகரித்து வந்தால் இம்மாநிலத்தில் முன்களப் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்படும் என்று குறிப்பிட்டார். கூட்டம் கூடுவதற்கு எதிராக தடை விதிக்கப்படும் என்று கூறிய அவர், ஊரடங்கிற்கு எதிராக போராட்டம் செய்ய இருப்பதாக கூறிய எதிர்க்கட்சியினரிடம் இது போன்ற நேரத்தில் அரசின் நிர்வாகத்திற்கு நீங்கள் உதவ வேண்டும் என்றும் கூறினார்.

"இன்று நான் முழுமையான ஊரடங்கு பற்றி எச்சரிக்கிறேன், ஆனால் அதை அறிவிக்கவில்லை. அடுத்த இரண்டு நாட்களில் நிபுணர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் பேசுவேன். ஊரடங்கைத் தவிர வேறு வழியில்லை என்றால், நாங்கள் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும், ”என்றார். தொற்று சங்கிலியை எவ்வாறு உடைப்பது என்பதுதான் அரசாங்கத்தின் முன் உள்ள கேள்வி என்று அவர் கூறினார்.

States start moving to contain surge Centre says 11 States/UTs are of grave concern

புதுதில்லியில், அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா தலைமையில் நடந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர்கள், டிஜிபிக்கள் மற்றும் மாநிலங்களின் மூத்த சுகாதார அதிகாரிகள் கலந்து கொண்டனர் - அடுக்கு 2 மற்றும் அடுக்கு 3 நகரங்களும், நகர்ப்புற பகுதிகளும் தொடர்ந்து அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கை விகிதம் கவலை அளித்து வருகின்றன, மேலும் பலவீனமான சுகாதார உள்கட்டமைப்புடன் கிராமப்புறங்களில் தொற்று பரவுவது சுகாதார அமைப்பை மூழ்கடிக்கும் என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு தெரிவித்தது.

வெள்ளிக்கிழமை அன்று ஒரே நாளில் 81,466 பேருக்கு கொரோனா தொற்று நாடு முழுவதும் உறுதி செய்யப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 469 நபர்கள் உயிரிழந்தனர். தற்போது மிகவும் முக்கியான கட்டத்தை நோக்கி இந்தியா நகர்ந்துவிட்டதாகவும், கொரோனா உச்சத்தில் இருக்கின்ற போது 97,000 பேருக்கு நாள் ஒன்றுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தற்போது நாள் ஒன்றுக்கு 81 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தற்போது 6,14,696 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் அதில் 77.91% பேர் மகாராஷ்ட்ரா, கர்நாடகா, சத்தீஸ்கர், கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் உள்ளனர். இந்த சந்திப்பின் போது, சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண், மோசமான நிலைமை குறித்து விரிவான விளக்கக்காட்சியை வழங்கினார், குறிப்பாக மகாராஷ்டிராவின் நிலைமை குறித்து எச்சரித்துள்ளார். சிகிச்சை பெற்று வரும் மொத்த நபர்களில் 60% பேர் இந்த மாநிலத்தில் உள்ளனர்.

அதிக தொற்றை ஏற்படுத்தும் 11 மாநிலங்களில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான விகிதாச்சார அதிகரிப்பு ஒன்றும் ஏற்படவில்லை. மைக்ரோ-கன்டெய்ன்மென்ட் மண்டலங்களை அமைக்கவும், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரின் 30 நெருங்கிய தொடர்புகளையும் 72 மணி நேரத்திற்குள் கண்டுபிடித்து தனிமைப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

நேர்மறை 5% அல்லது 5% க்கும் குறைவாக இருப்பதை உறுதிசெய்ய தொடர்ந்து சோதனையை அதிகரிக்கவும்.

ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகள் மொத்த சோதனைகளில் 70% இருப்பதை உறுதி செய்வதில் கவனம் செலுத்துங்கள்.

சோதனை முடிவுகளின் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும்.

ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட்களை (RAT) அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகளிலும், புதிய தொற்றுகள் உருவாகி வரும் இடங்களிலும் ஸ்கிரீனிங் சோதனையாகப் பயன்படுத்துங்கள்.

அனைத்து அறிகுறி RAT எதிர்மறைகளும் கட்டாயமாக RT-PCR சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள் தினமும் கண்காணிக்கப்படுவதை உறுதி செய்யுங்கள். தனிமைப்படுத்தப்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் தேவைப்பட்டால் உடனடியாக சுகாதார வசதிகளுக்கு மாற்றப்படுவார்கள்.

பரிமாற்றச் சங்கிலியை உடைக்க கண்டெய்மெண்ட் ஸோன்கள் / மைக்ரோ கண்டெய்மெண்ட் ஸோன்கள் அமைத்தல்.

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரின் 25 முதல் 30 நெருங்கிய தொடர்புகளைக் கண்டறிய முடியும் என்பதை உறுதிப்படுத்தவும். நெருங்கிய தொடர்புகளைக் கண்டறிதல் மற்றும் அவர்களை தனிமைப்படுத்துதல் ஆகியவற்றை 72 மணி நேரத்தில் செய்ய வேண்டும்.

மருத்துவமனைகள் வாரியாக உயிரிழப்பு விகிதங்களை கணக்கிட வேண்டும் என்றும், மருத்துவமனைகளில் தாமதமாக அனுமதிப்பது, தேசிய மருத்துவ மேலாண்மையை பின்பற்றாமல் இருப்பது போன்றவற்றை தணிக்கவும் மாநில அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. வழக்குகளை மேப்பிங் செய்தல், வார்டு / தொகுதி வாரியாக மறுஆய்வு செய்தல், 24 × 7 அவசரகால செயல்பாட்டு மையம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு மாவட்ட செயல் திட்டங்களை வகுக்க வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டது.

தினசரி இறப்புகளைக் குறைப்பதற்காக, பொது மற்றும் தனியார் சுகாதார வளங்களை வலுப்படுத்துவது குறித்து மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இறப்பு விகிதங்களை கட்டுக்குள் வைக்க

தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், ஆக்ஸிஜன் படுக்கைகள், வென்டிலேட்டர்கள் / ஐசியு படுக்கைகளின் எண்ணிக்கையை தேவைக்கேற்ப அதிகரிக்க வேண்டும்

செயற்கை சுவாச கருவிகள் பயன்பாடு குறித்து திட்டமிடுதல்

ஆம்புலன்ஸ் சேவைகளை வலுப்படுத்துதல். மறுப்பு வீதத்தைக் குறைத்தல்.

போதுமான எண்ணிக்கையிலான ஒப்பந்த ஊழியர்கள் உள்ளனர் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

எய்ம்ஸ், புது தில்லி கோர் குழு அல்லது மாநில கோர் குழுவுடன் மாவட்டங்களில் ஐ.சி.யூ மருத்துவர்களின் வழக்கமான தொலைபேசி ஆலோசனையைத் திட்டமிடுங்கள். செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வாரத்திற்கு இரண்டு முறை டெல்லி-கலந்தாய்வை எய்ம்ஸ், புது தில்லி நடத்துகிறது.

COVID Appropriate Behaviour (CAB) நடத்தையை கடுமையாக நடைமுறைப்படுத்த வலியுத்தப்பட்டுள்ளது.

காவல் சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் தவறியவர்களுக்கு அபராதம் விதிப்பதற்கான பிற சட்ட / நிர்வாக விதிகள் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும்,

உள்ளூர் அதிகாரிகள், அரசியல், கலாச்சார, விளையாட்டு, மத பிரமுகர்களை பயன்படுத்தி சரியான முறையில் முகமூடிகளை அணிந்துகொள்வது போன்ற தகவல்களை பரப்புதல்.

அதிகமாக கொரோனா பரவும் இடங்களான சந்தைகள், சமூக மற்றும் மத கூட்டங்களில் அதிகம் கவனம் செலுத்துங்கள்.

தடுப்பூசி வழங்குதல் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்

தகுதிவாய்ந்த சுகாதாரப் பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் தகுதியான வயதினருக்கு 100% தடுப்பூசி போடுவதற்கான காலவரையறை திட்டம்.

போதுமான தடுப்பூசி அளவை உறுதி செய்ய மத்திய சுகாதார அமைச்சகத்துடன் ஒருங்கிணைத்தல்.

இதற்கிடையில் மாநிலங்கள் ஊரடங்கு மற்றும் இதர முக்கிய திட்டங்களை செயல்படுத்த துவங்கியுள்ளன.

புனேயில் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூடுதல் தடை செய்யப்பட்டுள்ளது. திருமணத்திற்கு 50 பேரும், இறப்பிற்கு 20 பேருக்கும் மட்டுமே அனுமதி. மாலை 6 மணியில் இருந்து அடுத்த நாள் காலை 6 மணி வரை வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் 28 மாவட்டங்களில் 22 மாவட்டங்களில் இரவு நேரத்தில் (9 மணி முதல் காலை 6 மணி வரை) வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 6ம் தேதி முதல் 14ம் தேதி வரை துர்க் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ம் தேதி நிலவரப்படி அங்கே 9883 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. 750 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, குஜராத், ஹரியானா, உத்தரப்பிரதேசம், டெல்லி மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து உத்திரகாண்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பவர்கள் நெகடிவ் சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளது அம்மாநில அரசு. மாநிலத்திற்குள் நுழைவதற்கு 72 மணி நேரத்திற்கு முன் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை மேற்கொண்டிருக்க வேண்டும்.

இரவு ஊரடங்கு உத்தரவை ஒரு மணி நேரம் நீட்டிக்க ராஜஸ்தான் முடிவு செய்தது. ஜெய்ப்பூர் உள்ளிட்ட 10 நகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை நடைமுறையில் உள்ளது.

சந்தைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இரவு 9 மணிக்குள் மூடப்பட வேண்டும். அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 1-5 வகுப்புகள் மூடப்பட்டுள்ளன. உத்தரபிரதேசத்தில், ஏப்ரல் 11 ஆம் தேதி வரை 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான வகுப்புகளை மூடுமாறு பள்ளிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

9ம் வகுப்பு வரை பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. பொது / பல்கலைக்கழக தேர்வுகள் தவிர்த்து இதர உயர்நிலை கல்வி வகுப்புகள் செயல்படவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தளங்களில் ஒருவர் மட்டுமே வழிபட அனுமதி. ஜிம் மற்றும் நீச்சல் குளங்கள் ஆகியவையும் மூடப்பட உள்ளன. ஊரணி மற்றும் போராட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment