Advertisment

ஓ.எல்.எக்ஸில் விற்பனைக்கு வைக்கப்பட்ட படேல் சிலை? காவல்துறையினர் விசாரணை

பெருங்கொள்ளை நோய் தடுப்பு சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Statue of Unity on sale for rs 30 thousand crores

Statue of Unity on sale for rs 30 thousand crores

Statue of Unity on sale for rs 30 thousand crores - உலகம் முழுவதும் கொரோனா நோய் தீவிரமாக பரவி வருகின்ற காரணத்தால் பொதுமக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளே முடங்கியுள்ளனர். போதுமான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் சுகாதாரத்துறை, காவல்துறை, மருத்துவத்துறையை சார்ந்தவர்களுக்கு போதுமான மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் கிடைப்பதில்லை என்ற செய்திகளும் இங்கும் அங்கும் பரவி வருகிறது.

Advertisment

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

அரசின் தேவையை பூர்த்தி செய்ய தேவைப்படும் பணத்தை ஈட்டும் பொருட்டு ஒருவர் குஜராத் அமராவதி நதிக்கரையில் அமைந்திருக்கும் ஒற்றுமை சிலை எனப்படும் சர்தார் வல்லபாய் படேலின் சிலையை ஓ.எல்.எக்ஸில் விற்பனை செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளார்.

கொரோனாவை எதிர்த்து போராட, மருத்துவமனை மற்றும் சுகாதாரத்துறை உள்கட்ட வசதிகளுக்கு வசதிகளுக்காக இந்த சிலையை விற்பதாகவும், அதற்கு ரூ. 30,000 கோடியை விலையாகவும் நிர்ணயம் செய்துள்ளார் அந்த நபர். ஓ.எல்.எக்ஸ் விளம்பரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் முகம் தெரியாத அந்த நபர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அவரை குறித்து அறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது காவல்துறை. கேவடியா காவல் நிலையத்தில், பெருங்கொள்ளை நோய் தடுப்பு சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பள்ளி, கல்லூரிகள் எப்போது திறப்பு – மாணவர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment