வங்க கடலில் புயல் : வங்கடலில் மையம் கொண்டுள்ள புயல் இன்று (21.9.18) ஓடிசாவில் கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் வட மாநிலங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் புயல் :
வங்கக் கடலின் கிழக்கு மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. நேற்று அந்த காற்றழுத்தம் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் , அதைத் தொடர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறியது. இதனால் ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் வடக்கு கடலோர ஆந்திரா உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை பெய்துவருகிறது
இந்த புயலானது வடமேற்கு திசையில் புயல் நகர்ந்து இன்று கலிங்கபட்டிணம் கேபால்பூர் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.மணிக்கு 55 முதல் 65 கி.மீ. வேகத்தில் கடல் காற்று வீசும். இன்று 75 கி.மீ. வேகத்தில் வீசும் அளவுக்கு காற்றின் வேகம் அதிகரிக்க கூடும்.
மேலும் தெற்கு வங்க கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரையோர கிராமங்களில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்படடுள்ளனர்.
குறிப்பாக கஞ்சாம், பூரி மாவட்டங்களுக்கு அதிகபட்ச அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதே போல், கஞ்சாம், கோர்தா, நயகார்க், பூரி, கணபதி உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் விடுமுறைகளை ரத்து செய்து முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் புயல் சின்னத்தால் எந்த பாதிப்பும் இருக்காது என்றாலும் வட தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஒருசில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.