Advertisment

அமெரிக்க மாணவர்கள் படிக்கும் இந்திய வன மனிதனின் வரலாறு!

தனிமனிதர்களின் மகத்தான சாதனைகள் வரலாற்றிலும் வருங்கால சந்ததியினரின் வாழ்விலும் இடம் பெறும் என்பதற்கு ஒரு சான்றாக மாறியுள்ளார் ஜாதவ் பாயெங். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Story of 'Forest man of India' now part of US school curriculum

Story of 'Forest man of India' now part of US school curriculum : அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ஜாதவ் பாயெங். தனி ஒரு மனிதனாக ஒரு காட்டையே 550 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கியுள்ளார். அசாமில் உள்ள தரிசு நிலத்தை ஒரு வனமாக மாற்றிய 57 வயது விவசாயிக்கு ஏற்கனவே இந்திய அரசு பத்ம ஸ்ரீ விருதினை வழங்கி சிறப்பித்துள்ளது.

Advertisment

அசாமின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் மஜூலி தீவில் இயற்கை முற்றிலுமாக சீர் குலைந்து வருவதை கண்ட பாயெங் தன்னுடைய சொந்த முயற்சியால் மணற்பாங்கான பகுதியில் ஒரு காட்டையே உருவாக்கியுள்ளார். தற்போது அந்த காட்டில் யானைகள், மான்கள், காண்டாமிருகங்கள் மற்றும் புலிகள் போன்றவை வசித்து வருகிறது.

மேலும் படிக்க : கொடைக்கானலில் ஹெலிகாப்டர் சேவை: சுற்றுலாப் பயணிகளை கவர புதிய திட்டம்

இவரின் கடின உழைப்பையும், இயற்கை மாற்றத்திற்கான சிந்தனையையும் தற்போது அமெரிக்காவில் இருக்கும் கனெக்டிகட் பகுதியில் அமைந்திருக்கும் ப்ரிஸ்டோல் பள்ளி மாணவர்கள் பாடங்களாக படிக்க உள்ளனர். க்ரீன்ஹில்ஸ் பள்ளி மட்டும் அல்லாமல் ப்ரிஸ்டோலில் அமைந்திருக்கும் சில பள்ளிகளிலும் பாயேங்கின் வாழ்க்கை வரலாறு பாடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இங்கு தனிமனிதர்களின் மகத்தான சாதனைகள் வரலாற்றிலும் வருங்கால சந்ததியினரின் வாழ்விலும் இடம் பெறும் என்பதற்கு ஒரு சான்றாக மாறியுள்ளார் ஜாதவ் பாயெங்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Assam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment