Advertisment

சிக்கனை விரும்பி சாப்பிடும் கோவா மாடுகள்: மீண்டும் சைவத்திற்கு மாற்ற அரசு சிகிச்சை

Stray cattle turning non-vegetarian, sent for treatment: சிக்கனையும் வறுத்த மீனையும் சாப்பிட்ட தெரு கால்நடைகளை மீண்டும் சைவமாக மாற்றுவதற்கு கால்நடை சிறப்பு மருத்துவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கோவா கழிவு மேலாண்மை அமைச்சர் மைக்கேல் லோபோ கூறியுள்ளார். கலங்குட் கிராமத்தைச் சேர்ந்த 76 தெரு கால்நாடைகள் இப்போது ஒரு கோ சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Stray cattle turning non-vegetarian in Goa, Stray cattle turning non-vegetarian, கோவாவில் அசைவமாக மாறிய தெரு கால்நடைகள், சிகிச்சைக்கு அனுப்பப்பட்ட தெரு கால்நடைகள், கோவை, sent for treatment, Goa waste Management Minister Michael Lobo, Goa, kalangut village, stray cattle

Stray cattle turning non-vegetarian in Goa, Stray cattle turning non-vegetarian, கோவாவில் அசைவமாக மாறிய தெரு கால்நடைகள், சிகிச்சைக்கு அனுப்பப்பட்ட தெரு கால்நடைகள், கோவை, sent for treatment, Goa waste Management Minister Michael Lobo, Goa, kalangut village, stray cattle

Stray cattle turning non-vegetarian, sent for treatment: சிக்கனையும் வறுத்த மீனையும் சாப்பிட்ட தெரு கால்நடைகளை மீண்டும் சைவமாக மாற்றுவதற்கு கால்நடை சிறப்பு மருத்துவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கோவா கழிவு மேலாண்மை அமைச்சர் மைக்கேல் லோபோ கூறியுள்ளார். கலங்குட் கிராமத்தைச் சேர்ந்த 76 தெரு கால்நாடைகள் இப்போது ஒரு கோ சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த கால்நடைகள் தானியங்களையும் இதர சைவ உணவுகளையும் மறுத்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

“நாங்கள் 76 கால்நடைகளை கலங்குட்டிலிருந்து ஏற்றிக்கொண்டு அவைகளை கவனித்து வரும் கோ சாலைக்கு கொண்டு சென்றோம். அந்த கால்நடைகள் எல்லாம் அசைவ கால்நடைகளாக மாறிவிட்டன. கால்நடைகளை நம் எப்போது சைவம் என்று கூறுகிறோம். ஆனால், கலங்குட்டிலிருந்து வரும் கால்நடைகள் அசைவம். கோ சாலை இயக்குனர்கள் இப்போது இந்த சிக்கலை எதிர்கொள்கின்றனர். இந்த கால் நடைகள் புல் சாப்பிடுவதில்லை. தானியம் வடக்கு கோவாவில் உள்ள அர்போரா கிராமத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் மைக்கேல் லோபோ சனிக்கிழமை தெரிவித்தார்.

இந்த கால்நடைகளுக்கு கோ சாலையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. கால்நடை நிபுணர்கள் மருந்து மூலம் சிகிச்சையளிக்க பணிக்கப்பட்டுள்ளார்கள். “இந்த கால்நடைகளை மீண்டும் சைவ உணவு உண்பவர்களாக மாற்ற நான்கு முதல் ஐந்து நாட்கள் ஆகும்” என்று அவர் கூறினார்.

கால்நடைகள் சிக்கனையும் வறுத்த மீன்களையும் குப்பைகளிலிருந்தும் கிராமவாசிகளிடமிருந்தும் சாப்பிட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

“கலங்குட்டிலும் காண்டோலிமிலும் இருந்து வரும் கால்நடைகள், சிக்கன் துண்டுகளையும் உணவகங்களில் இருந்து பழைய வறுத்த மீன் போன்ற அசைவ உணவுகளை சாப்பிடுகின்றன. இதுபோல அசைவ உணவை உட்கொள்வதால் அவைகளின் அமைப்பு மனிதர்களைப் போல மாறிவிட்டது. முன்னதாக இந்த கால்நடைகள் சைவ உணவு உண்பவைகள். தூய சைவ உணவு உண்பவைகள். அவைகள் அசைவ உணவின் வாசனையை மட்டும் நுகர்ந்தவை. ஆனால், இப்போது அவைகள் அசைவ உணவு மட்டுமே சாப்பிடுகிறது.” என்று அவர் கூறினார்.

இரு சக்கர வாகன விபத்துகளுக்கும் போக்குவரத்து நெரிசலுக்கும் தெரு கால்நாடைகள் முக்கிய காரணமாக உள்ளன என்ற புகாரைத் தொடர்ந்து தெரு கால்நடைகள் கோ சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளன என்று லோபோ கூறினார். கால்நடைகள் மாயெம் கிராமத்தில் உள்ள கோமண்டக் கோசேவக் மகாசங் அறக்கட்டளைக்கு சொந்தமான கால்நடை கொட்டைக்க்கு மாற்றப்படுகிறது.

Goa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment