இமாலயப் புலிகள் : அருணாச்சலப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த இடு மிஷ்மி என்ற பூர்விகக் குடிகள் 2012ம் ஆண்டு மூன்று புலிக்குட்டிகளை திபங் வேலியில் பார்த்ததாக கூறினார்கள். ஆனால் அந்த புலிக்குட்டிகள் அங்கே எப்படி வந்தன என்பது குறித்து யாருக்கும் எந்த தகவலும் தெரியவில்லை. கடந்த ஆறு ஆண்டுகளாக அங்கு புலிகளின் நடமாட்டம் இருந்து வந்ததாக பல்வேறு கதைகள் கூறப்பட்டு வந்தன.
இமாலயப் புலிகள் : பாதுகாத்து வரும் மிஷ்மி பழங்குடியினர்
மிஷ்மி மலைத் தொடர்களின் அருகே வாழ்ந்து வருபவர்கள் தான் இடு மிஷ்மி பழங்குடிகள். திபெத் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் பகுதிகளில் வாழ்ந்து வரும் இம்மக்கள் புலிகள் மீது பெரிய அளவில் மரியாதை வைத்திருக்கிறார்கள்.
கேமராவில் பதிவான புலியின் புகைப்படம்
1912ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்த எஃப்.எம். பெய்லி மிஷ்மி மலைப் பகுதிகளில் அதிக அளவு புலிகள் வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டிருந்தார். அதன் பின்பு 2012ம் ஆண்டு தான் அங்கு புலிகளை பார்த்ததாக கூறினார்கள். அதன் பின்பு மிஷ்மி மலைப்பகுதியில் இருந்து 900 கி.மீ தொலைவில் இருக்கும் இட்டாநகர் விலங்கியல் பூங்காவில் பத்திரமாக கொண்டு இடம் மாற்றப்பட்டது.
வைல்ட் லைஃப் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியாவும், தேசிய டைகர் கான்செர்வேசன் அத்தாரிட்டியுடன் இணைந்து 2014ம் ஆண்டில் இருந்து புலிகள் நடவடிக்கை குறித்து மிஷ்மி மலைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.
மேலும் படிக்க : எச்சரிக்கை... அந்தமான் நிக்கோபர் தீவுகள் உங்களின் கேளிக்கை பிரதேசம் இல்லை
அதிகரித்து வரும் புலிகளின் எண்ணிக்கை
2014ம் ஆண்டு அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் ஒரு புலியின் பாதி படம் பதிவாகியிருந்தது. பின்பு 2015ம் ஆண்டும் சர்வே நடத்தப்பட்டது. மிஷ்மி மலைப் பகுதியில் 108 கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. 2 புலிக் குட்டிகள் உட்பட 11 புலிகள் உயர்ந்த மலைப் பகுதியில் வாழ்ந்து வருவதற்கு ஆதாரமாக 42 புகைப்படங்கள் பதிவாகியுள்ளன. கிழக்கு இமாலய மலைத் தொடர்களில் 3246 மீட்டர் உயரத்திலும், 3630 மீட்டர் உயரத்திலும் இரண்டு ஆண் புலிகள் புகைப்படங்கள் பதிவாகியுள்ளது.
கேமராவில் பதிவான புலியின் புகைப்படம்
பூடான் நாட்டில் 4200 மீட்டர் உயரத்திலும், மேற்கு இமாலய மலைத் தொடர்களில் 4000 மீட்டர் உயரத்திலும் புலிகளின் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் மேற்கு இமாலய மலைத் தொடர்களில் இருப்பதைப் போன்ற கால நிலை கிழக்கு இமாலய மலைத் தொடர்களில் இருப்பதில்லை. ரஷ்யாவில் வாழ்ந்து வரும் சைபீரியப் (ஆமுர்) புலிகளுக்கு பிறகு இந்தியாவில் தான், பனிப் பிரதேசத்தில் புலிகள் வாழ்கின்றன என்று இந்த சர்வே உறுதி செய்துள்ளது.
இது குறித்து இந்த சர்வேயில் ஈடுபட்ட ஐசோ ஷர்மா அதிகரிமயூம் கூறுகையில், இந்த பகுதியில் வாழும் இடு மிஷ்மி பழங்குடிகளால் தான் புலிகள் பாதுகாப்பாக வாழ்கிறார்கள். இவர்கள் புலிகளை அவர்களின் உடன் பிறப்புகளாக நினைத்து வருகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.