இந்திய தேர்தலில் ஃபேஸ்புக் தலையிட்டால் நடவடிக்கை உறுதி: மத்திய அமைச்சர் எச்சரிக்கை!

இந்தியர்களின் தனிப்பட்ட தகவலும் அளிக்கப்பட்டிருப்பதற்கு வாய்ப்புள்ளதாக ஊடகங்களில்

அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டது போல், இந்திய தேர்தலிலும் ஃபேஸ்புக் தலையிட முயன்றால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐடி அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் எச்சரித்துள்ளார்.

தற்போது ஃபேஸ்புக் நிறுவனத்தின் மீது படிந்துள்ள கறை அவ்வளவு எளிதாக மறையாது என்பது தொடர்ந்து உறுதியாகி வருகிறது. அமெரிக்காவில் ஃபேஸ்புக் செயலியைப் பயன்படுதும்  220 கோடி பேரில் 5 கோடி பேரின் தகவல்களை ஃபேஸ்புக் நிறுவனம், ‘கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ என்ற அரசியல் பிரசார நிறுவனத்திடம் அளித்ததாக பகிரங்கக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த புகார் குறித்து  விசாரணை நடத்த இங்கிலாந்து எம்.பி. டாமியன் கொலின்ஸ் என்பவர் தலைமையில் எம்.பி.க்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. வரும்  26–ந் தேதிக்குள்   மார்க் ஜூக்கர்பெர்க்  நேரில் ஆஜராகி, இவ்விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் மீது எழுந்துள்ள இந்த புகாரை அந்நிறுவனர். மார்க் தனது முகநூல் பக்கத்தில்  ஒப்புக்கொண்டுள்ளார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவம்  ஃபேஸ்புக் யூசர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், ஃபேஸ்புக்  நிறுவனம் அளித்துள்ள  இந்த தகவலில் இந்தியர்களின் தனிப்பட்ட தகவலும் அளிக்கப்பட்டிருப்பதற்கு வாய்ப்புள்ளதாக  ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், இதுக் குறித்து டெல்லியில் பேசிய தொழிட்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் ஃபேஸ்புக் நிறுவனத்தின்  நிறுவன் மார்க்  ஜூக்கர்பெர்க்கை கடுமையாக எச்சரித்தார். அவர் கூறியதாவது, “சமூக ஊடகங்கள் மூலம் பரிமாற்றப்படும் இலவச கருத்துகளை மற்றும் எழுத்து மற்றும் கருத்து சுதந்திரத்தைஉ நாங்கள் ஆதரிக்கிறோம்.

ஆனால், அதே சமயம்,  ஃபேஸ்புக் உட்பட எந்தச் சமூக இணையதளங்களாவது, இந்தியாவில் நடைபெறும் தேர்தல் செயல்பாடுகளின் தலையிடன் நினைத்தால் பொறுத்துக் கொள்ள முடியாது.  ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், உங்களுக்கு இந்தியாவின் ஐ.டி சட்டத்தைப் பற்றி நன்கு தெரியும் என்று நினைக்கிறேன்.

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா பாலியல் பிரச்சினை, ஒழுக்கமற்ற செயல்பாடுகள், போலி செய்திகளை பயன்படுத்தி பல்வேறு நாடுகளில் பொதுத் தேர்தலை சீர்குலைப்பது போன்ற செயலை இந்தியாவில் நடத்த நினைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல்,   இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஏதேனும் ஃபேஸ்புக் மூலம் திருடப்பட்டது என்று தெரியவந்தாலும், அதன் பின்பு எடுக்கப்படும் நடவடிக்கை மிக கடுமையாக  இருக்கும்” என்று எச்சரித்தார்.

 

 

 

 

×Close
×Close