ஜம்மு காஷ்மீரின் 3 முக்கியப் பகுதிகள் இடதுசாரி பயங்கரவாத பகுதிகள் மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்துவதில் நரேந்திர மோடி அரசு பெரும் வெற்றி பெற்றுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தார். 2004 முதல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 10 ஆண்டு காலத்தையும் நரேந்திர மோடி தலைமையிலான 9 ஆண்டுகளையும் ஒப்பிட்டு அமித்ஷா பேசினார்.
டேராடூனில் 49-வது அகில இந்திய போலீஸ் அறிவியல் மாநாடு (ஏ.ஐ.பி.எஸ்.சி) நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றுப் பேசினார். அவர் பேசுகையில், இந்தியா 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில் இந்தியாவை அனைத்து துறைகளிலும் முதலிடத்திற்கு கொண்டு செல்ல மோடி அரசு திட்டமிட்டுள்ளது என்றார்.
"அதற்கு கடின உழைப்பு தேவை, ஆனால் அதன் முதல் நிபந்தனை நமது சட்டம் மற்றும் ஒழுங்கை வலுப்படுத்துவது மற்றும் உள் நாட்டில் மற்றும் எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்துவதாகும். இதற்காக உள்துறை அமைச்சகம் பல மாற்றங்களைச் செய்துள்ளது. இப்போது அமிர்த காலில், அந்த மாற்றங்களைச் செயல்படுத்த வேண்டிய நேரம். அந்த வகையில் இந்த காவல்துறை மாநாடு மிக முக்கியமானது'' என்றார்.
தொடர்ந்து, “சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரின் நிலைமையைப் பார்த்து நாட்டிலுள்ள ஒவ்வொரு நபரும் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள் என்று என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும். நமது ஜம்மு & காஷ்மீர் இப்போது என்றென்றும் இந்தியாவின் ஒரு பகுதியாகும்.
https://indianexpress.com/article/india/stronger-security-measures-a-must-to-take-nation-to-the-top-says-shah-8973027/
அதேபோல், இடதுசாரி பயங்கரவாத பகுதிகளிலும் குற்றங்கள் குறைவதால், வளர்ச்சி திட்டங்கள் கிராமங்களை சென்றடைகிறது. சுகாதாரம், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றின் ஒரு புதிய சகாப்தம் ஒவ்வொரு தெருங்களையும் சென்றடைகிறது. வடகிழக்கு மாநிலங்களை அமைதியுடன் இணைப்பதில் நரேந்திர மோடி அரசு வெற்றி பெற்றுள்ளது'' என்றார்.
இந்த மாநாட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 கருப்பொருள்களும் சட்டம் ஒழுங்கு, உள் மற்றும் எல்லை பாதுகாப்பு தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் விவாதிக்க தேர்ந்தெடுக்கப்பட்டதாகும். இந்த கருப்பொருள்கள் - 5G சகாப்தத்தில் காவல் துறை, போதைப்பொருள்: விளையாட்டை மாற்றும் அணுகுமுறை, காவல்துறை மற்றும் CAPF களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு, NCRB, உள் பாதுகாப்பு மற்றும் சமூக ஊடக சவால்கள் மற்றும் சமூக காவல்துறை ஆகியவை ஆகும்.
மோடி அரசாங்கத்தை முந்தைய அரசாங்கத்துடன் ஒப்பிடுகையில், 2004 மற்றும் 2014-க்கு இடையில் ஜே&கே, NE மற்றும் LWE- பாதிக்கப்பட்ட பகுதிகளில் - காங்கிரஸ் ஆட்சியின் கீழ் மொத்தம் 33,200 வன்முறை சம்பவங்கள் நடந்ததாகவும், மோடி ஆட்சியின் கீழ் வெறும் 12,358 வன்முறை சம்பவங்கள் மட்டுமே நடந்ததாகவும் அவர் கூறினார்.
காங்கிரஸின் 10 ஆண்டுகால ஆட்சியில் 11,947 பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இறந்தனர்.
அதே நேரத்தில் இந்த 9 ஆண்டுகளில் வெறும் 3,240 உயிரிழப்புகள் மட்டுமே நடந்துள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில், இது மேலும் குறையும் என்று நான் உறுதியளிக்கிறேன்” என்று ஷா கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“