ஆபாச மெசேஜ் அனுப்பிய பேராசிரியர்...தர்ம அடிக் கொடுத்த மாணவிகள்!!!

பஞ்சாப் மாநிலத்தில் மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய பேராசிரியருக்கு, கல்லூரி மாணவிகள் தர்ம சித்து கொடுத்து இழுத்துச் சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பாட்டியலாவில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியுள்ளார். பேராசிரியரின் இந்த இழிவான செயலால் கோபமடைந்த மாணவிகள் அவரை அடித்து இழுத்துச் சென்றுள்ளனர்.

இரட்டை அர்த்தங்கள் கொண்ட ஆபாச மெசேஜ் அனுப்பிய பேராசிரியரை கல்லூரி மாணவிகள் அடித்து உதைத்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியது. இதனைச் சுற்றியிருந்த மாணவிகளும் படம் பிடித்துள்ளனர். பின்னர் இந்த வீடியோ காட்சியை சமூக வலைத்தளத்தில் மாணவிகள் பதிவிட்டனர்.

மாணவிகள் கல்லூரி பேராசிரியரை அடித்து இழுத்துச் செல்லும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக வருகிறது.

×Close
×Close