கோவாவில் உள்ள ஒரு ஹோட்டலில் தனது நான்கு வயது மகனைக் கொன்றதாகக் கூறப்படும் பெங்களூரைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் தலைமை நிர்வாக அதிகாரி சுசனா சேத்திடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
குழந்தையின் பிரேதப் பரிசோதனையில் சிறுவன் "முகத்தில் அமுக்கி கொல்லப்பட்டான்" என்பதும், குறைந்தது 36 மணி நேரத்திற்கு முன்பே கொலை நடந்துள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.
கர்நாடகாவில், பிரேத பரிசோதனை செய்த அரசு மருத்துவர் குமார் நாயக், குழந்தை கழுத்தை நெரித்து அல்லது முகத்தை அமுக்கி கொலை செய்யப்பட்டுள்ளான். 36 மணி நேரத்திற்கு முன்பே கொலை நடந்துள்ளது. குழந்தையின் உடலில் கடுமையான காயங்களோ போராட்ட அறிகுறிகளோ இல்லை. ஒரு தலையணை அல்லது வயரை பயன்படுத்தி கொலை செய்திருருக்கலாம், என்றார்.
தசைகளில் ஏற்படும் ரசாயன மாற்றங்களால் சடலத்தின் கைகால் விறைப்பு – குறைந்தபட்சம் 36 மணி நேரத்திற்கு முன்னதாக கொலை நடந்ததாகக் கூறுகிறது.
கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் இருந்து தனது மகனின் உடலை பையில் அடைத்துக்கொண்டு வண்டியில் தப்பிச் செல்ல முயன்றபோது சேத் பிடிபட்டார்.
கோவாவில், அவளிடம் விசாரணையில் ஈடுபட்ட ஒரு மூத்த போலீஸ் அதிகாரி, சர்வீஸ் அபார்ட்மெண்டில் இருந்து ஒரு தலையணையைப் பயன்படுத்தி குழந்தை கொல்லப்பட்டிருக்கலாம், என்று கூறினார்.
கொலைக்கான ஆயுதம் எதுவும் அங்கு இல்லை. சுசனா ஒரு ஜோடி கத்தரிக்கோலால் தனது மணிக்கட்டை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதை சரிபார்க்க ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, டிஎன்ஏ சோதனை செய்யப்படும், என்று அந்த அதிகாரி கூறினார்.
சுசனா தங்கியிருந்த ஹோட்டல் அறையில் ரத்தம் இருப்பதை துப்புரவு ஊழியர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கர்நாடகாவுக்கு சென்று கொண்டிருந்தபோது போலீசார் அவளை அழைத்தனர். அவரது ஹோட்டல் அறையில் ரத்தம் இருப்பதை பற்றி அவளிடம் கேட்டபோது, அவள் மாதவிடாய் காலத்தில் இருந்ததால் தான் என்று முதலில் கூறினாள்.
அவள் சுத்தம் செய்ய பணம் தருவதாக சொன்னாள். எவ்வாறாயினும், எங்கள் முதற்கட்ட விசாரணையில், துண்டுகள் மற்றும் தரையில் அவள் அடைந்த காயங்களிலிருந்து ரத்தக் கறைகள் இருப்பதைக் கண்டறிந்தோம், என்று அந்த அதிகாரி கூறினார்.
சேத் 2010 இல் வெங்கட் ராமனை மணந்தார் என்றும், தம்பதியருக்கு 2019 இல் ஒரு மகன் பிறந்ததாகவும், அதைத் தொடர்ந்து அவர்களின் திருமணத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். அவரது கணவரின் கூற்றுப்படி, மகன் பிறந்த உடனேயே, சுசனா குழந்தையின் மீது மிகவும் பொசசிவ் ஆகிவிட்டாள். அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வந்தது.
விரைவில், இருவரும் பிரிந்தனர், கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்கள் தொடர்பில் இல்லை.
அவர்களின் விவாகரத்து நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்தன. பெங்களூரு குடும்பநல நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குழந்தை தந்தையின் பாதுகாப்பில் இருக்கலாம் என்று உத்தரவிட்டது. கடந்த ஐந்து வாரங்களாக, அவள் தன் மகனை, தந்தையைப் பார்க்க அனுமதிக்கவில்லை.
இன்னும் ஒரு வாரம் கடத்துவதற்காக தான் அவள் வார இறுதியில் கோவா வந்தாள் என்று நாங்கள் நம்புகிறோம், என்று அந்த அதிகாரி கூறினார்.
விசாரணையின் போது, சுசனா தன் மகனைக் கொல்லவில்லை. தனது மகன் தூங்கிக் கொண்டிருந்தான் என்றும், அவன் எப்படி இறந்தான் என்று தனக்குத் தெரியவில்லை, என்று கூறினார்.
கோவாவில் இருந்து பெங்களூரு செல்லும் போது வரை அமைதியாக இருந்ததாக கேப் டிரைவர் போலீசாரிடம் தெரிவித்தார்.
அவரது சூட்கேஸ் வழக்கத்திற்கு மாறாக கனமாக இருப்பதை பற்றி கேட்டபோது, அது ஆடைகள் மற்றும் கூடுதல் சாமான்கள் காரணமாகும் என்று சுசனா கூறியுள்ளார். மேலும் அவர் தனது மகனுடன் கோவாவுக்கு கடந்த காலத்தில் சென்றிருந்தார், என்று அதிகாரி கூறினார்.
Read in English: Suchana Seth’s questioning, son’s post-mortem reveal he was ‘smothered 36 hours earlier’
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.