கோவா ஹோட்டலில் தனது நான்கு வயது மகனைக் கொன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெங்களூரைச் சேர்ந்த டெக் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுசனா சேத்ஜனவரி முதல் ஜனவரி வரை அறையை முன்பதிவு செய்திருந்தார்ஆனால் அதற்கு முன்னதாகவே செக் அவுட் செய்ததாக திஇந்தியன் எக்ஸ்பிரஸிடம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலிசாரின் கூற்றுப்படி, ஜனவரி ஆம் தேதி இரவு மணியளவில்வடக்கு கோவாவின் கண்டோலிமில் உள்ள ஹோட்டல் சோல் பனியன் கிராண்டேவில் உள்ள சர்வீஸ் அபார்ட்மென்ட் ஊழியர்களிடம் சுசனா தனக்கு பெங்களூருவில் அவசர வேலைஇருப்பதால் செக்-அவுட் செய்ய விரும்புவதாகவும்டாக்ஸி ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டார்.
அவர் நள்ளிரவு மணிக்கு ஹோட்டலை விட்டு வெளியேறினார் என்று கூறுகிறது.
கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் இருந்து தனது மகனின் உடலை பையில் அடைத்துக்கொண்டு வண்டியில் தப்பிச் செல்ல முயன்றபோது சேத் பிடிபட்டார்.
காவல்துறையின் கூற்றுப்படிகோவா-கர்நாடகா எல்லையின் சந்திப்பில் அமைந்துள்ள சோர்லா காட் என்ற இடத்தில் ஒரு டிரக் விபத்தில் சிக்கியது. இதில் வண்டி அதிகாலை மணி முதல் காலை மணி வரை நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டது.
கண்டோலிமில் இருந்து பெங்களூருக்கு பயணம் சுமார் 11-12 மணி நேரம் ஆகும். சோர்லா காட்டில் டிரக் கவிழ்ந்ததால், போக்குவரத்து தடைசெய்யப்பட்டது, இதனால் துரதிர்ஷ்டவசமாக சுசனா பயணம் நான்கு மடங்கு தாமதமானது.
இதற்கிடையில்ஹோட்டல் ஊழியர்கள் ரத்தக் கறைகளைக் கண்டுபிடித்ததாகத் தெரிவித்தனர்மேலும் டாக்ஸி டிரைவர் மற்றும் குற்றவாளியை நாங்கள் கண்காணிக்க முடிந்ததுஎன்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.
சமீபத்திய நீதிமன்ற உத்தரவின்படிஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் மகனை சந்திக்கலாம் என்று சுசனா தனது பிரிந்த கணவருக்கு சனிக்கிழமை (ஜனவரி மெசேஜ் அனுப்பியதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இருவரும் விவாகரத்து மற்றும் காவல் நடவடிக்கைகளில் சிக்கியுள்ளனர்.
AI நிறுவனத்தை நடத்தி வரும் அவரது கணவர் வெங்கட்ராமன் அந்த நேரத்தில் பெங்களூரில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் ஞாயிற்றுக்கிழமை மகனை பார்ப்பது தொடர்பாக அவருக்கு எந்த பதிலும் கிடைக்காததால், அவர் அடுத்த நாள் வணிக நோக்கங்களுக்காக ஜகார்த்தாவிற்கு புறப்பட்டார், என்று ஒரு அதிகாரி கூறினார்.
கோவாவில்சுசனா சர்வீஸ் அபார்ட்மெண்டில் தங்கியிருந்ததாகவும்ஜனவரி ஆம் தேதி ஆன்லைனில் ஒரு காபி மற்றும் சிறிது உணவையும் ஆர்டர் செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். ஹோட்டலில் ஒரு சிசிடிவி உள்ளதுஅதன் காட்சிகள் விசாரணையின் போது மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
போலிசாரின் கூற்றுப்படிசுசனா தாய் இப்போது இல்லைஅவரது தந்தை கொல்கத்தாவில் இருக்கிறார். புதன்கிழமைகுற்றம் சாட்டப்பட்டவரின் தடயவியல் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
சுசனா அடிக்கடி கோவாவிற்கு வருபவர், கடந்த மாதம் கூட வந்திருந்தார், என்று ஒரு அதிகாரி கூறினார்.
Read in English: Suchana Seth ‘had booked hotel room for longer’, ‘texted husband day before son’s murder’
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“