Advertisment

சூடான் சிலிண்டர் விபத்தில் 18 தமிழர்கள் பலி? - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sudan LPG tanker blast 18 Indians killed cm palaniswamy pm modi - சூடான் சிலிண்டர் விபத்தில் 18 தமிழர்கள் பலி? - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

Sudan LPG tanker blast 18 Indians killed cm palaniswamy pm modi - சூடான் சிலிண்டர் விபத்தில் 18 தமிழர்கள் பலி? - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

சூடான் நாட்டில் உள்ள ஒரு செராமிக் தொழிற்சாலையில் எல்பிஜி டேங்கர் வெடித்ததில் குறைந்தது 18 இந்திய தொழிலாளர்கள் பலியாகி இருக்கலாம் என்றும் 130 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் இந்திய தூதரகம் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது. விபத்து நிகழ்ந்த போது இந்த தொழிற்சாலையில் சுமார் 68 இந்திய தொழிலாளர்கள் இருந்ததாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தகவல்கள் தெரிவித்துள்ளன.

Advertisment

உ.பி., பீகார், ராஜஸ்தான், தமிழ்நாடு, குஜராத் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த இந்தியர்கள் பலியாகி இருக்கலாம் என்று கார்டோமில் (Khartoum) உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

சூடானின் தலைநகர் கார்ட்டூமில் பஹ்ரி பகுதியில் உள்ள சீலா செராமிக் தொழிற்சாலையில் நடந்த இந்த சம்பவத்திற்குப் பிறகு, 16 இந்தியர்கள் காணாமல் போயுள்ளனர். "சமீபத்திய அறிக்கைகளின்படி, இதுவரை 18 இந்தியர்கள் பலியாகி உள்ளனர். ஆனால், இது உறுதிபடுத்தப்படவில்லை" என்று இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

4, 2019

"காணாமல் போனவர்களில் சிலர் இறந்தவர்களின் பட்டியலில் இருக்கலாம், உடல்கள் எரிந்துவிட்டதால் அடையாளம் காண முடியவில்லை" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

புதன்கிழமை, இந்திய தூதரகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, காணாமல் போன அல்லது விபத்தில் இருந்து தப்பிய இந்தியர்களின் விரிவான பட்டியலை வெளியிட்டது. அதன் தரவுகளின்படி, 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், நான்கு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

தப்பிய 34 இந்தியர்கள் சலூமி மட்பாண்ட தொழிற்சாலை இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழநிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "சூடான் தீ விபத்தில் தமிழர்கள் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் அதன் உண்மை நிலையை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சூடானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் காணாமல் போன தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment