Advertisment

சுகேஷ் சந்திரசேகரிடம் ரூ25 கோடி லஞ்சம் பெற்ற சிறை அதிகாரிகள்: 82 பேரை விசாரிக்க முடிவு

Economic Offences Wing (EOW) Need to probe 82 staff at Rohini jail who helped Sukesh Chandrashekhar Tamil News: 'மோசடி மன்னன்' சுகேஷ் சந்திரசேகரிடம் 25 முதல் 30 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்ற 7 சிறை அதிகாரிகள் உட்பட 82 பேரை விசாரிக்க சிறைத்துறை டிஜிபிக்கு பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரி கடிதம் எழுதியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Sukesh Chandrashekhar bribed Rohini jail officials, EOW to investigate 82 people

Sukesh Chandrashekhar Tamil News: பெங்களூருவில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் சுகேஷ் சந்திரசேகர். 12ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் என பலரிடம் கோடிக்கணக்கான ரூபாய் பண மோசடி செய்திருக்கிறார். இதுதொடர்பாக ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டு விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில், சுகேஷ் டெல்லி ரோகினி சிறையில் இருந்தபோது, அவர் தனது இரண்டு தொலைபேசிகளையும் சுதந்திரமாகப் பயன்படுத்தி வந்துள்ளார். சிறை அதிகாரிகள் அவருக்கு அதற்காக பிரத்யேக இடத்தையும் வழங்கியுள்ளனர். அப்போதுதான் போர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ஷிவிந்தர் சிங்கின் மனைவிக்கு போன் செய்து, அவரது கணவருக்கு ஜாமீன் வழங்க 200 கோடி ரூபாய் பேரம் பேசி பெற்றுள்ளார். அந்த செல்போன் ஆடியோ கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதனிடையே, கைதி சுகேஷ் சந்திரசேகர் பணம் பறிக்க உதவியதாக ஏழு சிறை அதிகாரிகளை டெல்லி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், இந்த சம்பவம் நடந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சுகேஷ் தனக்கென ஒரு முழு பாராக் பாதுகாப்பிற்காக சிறை அதிகாரிகளுக்கு சுமார் 25 முதல் 30 கோடி ரூபாய் வரை கொடுத்ததாகவும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ரோகினி சிறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 82 பேரை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) அதிகாரிகள் சிறை நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளனர்.

இது குறித்து ஜனவரி 10ம் தேதி திகார் சிறை தலைமை இயக்குனர் சந்தீப் கோயலுக்கு பொருளாதார குற்றப்பிரிவு (EOW - ஈஓடபிள்யூ) அதிகாரி முகமது அலி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடித்தத்தில், "அதிதி சிங்கின் புகாரின் பேரில் ஆகஸ்ட் 7, 2021 தேதியில் ஒரு வழக்கு, ஐபிசி, ஐடி சட்டம் மற்றும் எம்சிஓசிஏ ஆகிய பிரிவுகளின் கீழ் சிறப்புப் பிரிவு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், இரண்டு சிறைக் கண்காணிப்பாளர்கள் சுனில் குமார், சுந்தர் போரா, துணைச் சிறைக் கண்காணிப்பாளர்கள் பிரகாஷ் சந்த், மகேந்தர் பிரசாத் சுந்தர்யால், சுபாஷ் பத்ரா மற்றும் இரண்டு உதவிக் கண்காணிப்பாளர்கள் தரம் சிங் மீனா மற்றும் லட்சுமி தத் ஆகிய 7 சிறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரோகிணி சிறையில் உள்ள பாராக் எண் 204, வார்டு எண் 3, சிறை எண் 10 இல் இருந்து செயல்படும் மோசடி மன்னன் சுகேஷால் நடத்தப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவை எளிதாக்குவதில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது. எனவே சிறை எண். 10ன் சிறை அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்த PoC சட்டத்தின் பிரிவு 17 (A) இன் கீழ் ஒப்புதல் வழங்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 14, 2021 வரை ரோகினி சிறையில் பொருத்தப்பட்டிருந்த 10 கேமராக்களின் சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டதாகவும், அவை சுகேஷ் அடைக்கப்பட்டிருந்த வார்டு எண். 3 மற்றும் பேரக் எண் 204 ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருப்பதாவும் கூறியுள்ளார்.

“சுகேஷின் பாராக்கில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் பார்வை திரைச்சீலைகள் மற்றும் மினரல் வாட்டர் பாட்டில்கள் பெட்டியை அங்கிருந்த கேமராவின் முன் வைப்பதன் மூலம் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.

கேமராவின் பார்வையில் இருந்து பொருளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை செய்து கொடுக்க சிறை அதிகாரிகள் சுகேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளிடமிருந்து பெரும் தொகையைப் பெற்று உள்ளனர். இது தொடர்பாக ரோகினி சிறையில் உள்ள சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் நிறுத்தப்பட்டிருந்த வார்டர் நீரஜ் மான் சிசிடிவி பதிவேட்டில் செய்த பதிவுகள் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது.

அது மட்டுமல்லாமல், வார்டர் நீரஜ் மானுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.மற்றும் மூத்த சிறை அதிகாரிகளால் அத்தகைய பதிவுகளை செய்வதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளனர். ரோகினி சிறை எண் 10ல் உள்ள மூத்த அதிகாரிகள் உட்பட ஊழியர்கள் சுகேஷுடன் உடந்தையாக இருந்ததை இது தெளிவாக உறுதிப்படுத்தியது. மற்றும் சுகேஷுக்கு பாதுகாப்பான புகலிடமான சிறைக்குள் இருந்தே அவரது குற்றச் செயல்களைச் செய்ய அவருக்கு உதவி இருக்கின்றனர்.

சிறை ஊழியர்களின் பணிப் பட்டியல் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் வாக்குமூலங்களைச் சரிபார்த்ததில், சுகேஷின் குற்றச் செயல்களைச் செய்வதற்கு வசதியாக, சுகேஷுடன் கலந்தாலோசித்து, அவருடைய செல்லில் ஊழியர்கள் நிறுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட தொலைபேசியின் அழைப்பு விவரங்கள் பதிவு (சிடிஆர்) மற்றும் இன்டர்நெட் புரோட்டோகால் விவரப் பதிவேடு (ஐபிடிஆர்) ஆகியவற்றை ஆய்வு செய்ததில், சுகேஷ் தொடர்ந்து இரண்டு மொபைல் போன்களை வைத்திருப்பது கவனிக்கப்பட்டு இருக்கிறது.

உதவிக் கண்காணிப்பாளர்களில் ஒருவரான தரம் சிங் மீனாவின் தொலைபேசியில் இருந்து பெறப்பட்ட தரவுகளில் இருந்து, ஒரு பக்க பதிவு மீட்டெடுக்கப்பட்டது. இது விசாரணையின் போது அவர் விளக்கபட்டுள்ளது. மேலும் சிறை அதிகாரிகள் வழக்கமான அடிப்படையில் பெரும் தொகையைப் பெறுகிறார்கள் என்பது தெளிவாகிறது. சுகேஷ், மொபைல் ஃபோனைப் பயன்படுத்துவதற்கான வசதிகள் மற்றும் எந்தத் தடையுமின்றி தனியே இருக்க ஒவ்வொரு மாதமும் சுமார் 1.5 கோடி ரூபாய் செலுத்தி வந்துள்ளார். " என்று அந்த கடித்தத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த கடிதம் தொடர்பாக விவரிக்க திகார் சிறை தலைமை இயக்குனர் சந்தீப் கோயலை இந்திய எக்ஸ்பிரஸ் இதழ் தொடர்பு கொண்ட நிலையில், அவர் கடிதம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

ஆனால், கடிதம் குறித்து பேசியுள்ள பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரி முகமது அலி, “கைது செய்யப்பட்ட சிறை அதிகாரிகளின் வாக்குமூலங்கள் மற்றும் விசாரணையின் போது சேகரிக்கப்பட்ட ஆவணங்கள், உண்மைகள் மற்றும் சாட்சியங்களில் இருந்து, இது போன்ற குற்றச் செயல்களை கண்டுகொள்ளாமல் அமைதியாக இருக்கவும், ஒதுங்கிக்கொள்ளவும், அவர்களின் கடமைகளைப் பொருட்படுத்தாமல் இருக்கவும் லஞ்சமாக பணம் கொடுக்கப்பட்டு உள்ளது." என்று கூறியுள்ளார்,

இந்த வழக்கில் இதுவரை சுகேஷின் பார்ட்னரான நடிகை லீனா மரியா பால் உட்பட 14 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Delhi Police Sukesh Chandrashekhar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment