New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Sukesh-Jacqueline.jpg)
பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் தொழிலதிபர்களை பலரை ஏமாற்றி பண மோசடி செய்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். ஃபோர்டிஸ் ப்ரோமோட்டர் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகியின் மனைவியிடம் இருந்து ரூ.200 கோடி பண மோசடி செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார்.
மோசடி பணத்தில் நடிகை ஜாக்குலினுக்கு தொடர்பு இருப்பதாகவும், அப்பணத்தில் ஜாக்குலினுக்கு ரூ.7 கோடிக்கு மேல் பரிசுப்பொருட்கள் வாங்கி கொடுத்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு அவர் மீதும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது சிறையில் உள்ள சுகேஷ், ஊடகங்கள், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் என எல்லோருக்கும் ஹோலி வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். தொடர்ந்து நடிகை ஜாக்குலினுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். மிகவும் அற்புதமான, அருமையான மனிதர் என் அன்பு ஜாக்குலினுக்கு ஹோலி வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
லவ் யூ மை பிரின்சஸ், பொம்மா
ஜாக்குலினுக்கு அவர் எழுதிய கடிதத்தில், "வண்ணமையமான இந்த நாளில் நான் உனக்கு உறுதியளிக்கிறேன். உன் வாழ்க்கையில் தொலைந்து போன வண்ணங்களை 100 மடங்குகளாக மீண்டும் உனக்கு திரும்பி கொடுப்பேன், அந்த பொறுப்பு எனக்கு உள்ளது.
Ever beautiful Jacqueline...100x folds...for you my baby girl 👉👉🤣🤣---Sukesh Chandrashekhar pic.twitter.com/16dejnRIMM
— Gayathri Mani (@gayathrireports) March 6, 2023
உனக்காக நான் எந்த எல்லைக்கும் செல்வேன் என்று உனக்கு தெரியும். ஐ லவ் யூ. எப்போதும் சிரித்துக் கொண்டே இரு. லவ் யூ மை பிரின்சஸ், மிஸ் யூ லோட்ஸ், என் பொம்மா" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் காதலர் தினத்திலும் சுகேஷ் ஜாக்குலினுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். பொருளாதார குற்ற வழக்கில் சுகேசுக்கு எதிராக ஜாக்குலின் சாட்சியாக மாறியுள்ளார்.
ஃபோர்டிஸ் ப்ரோமோட்டர் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகி ஷிவிந்தர் சிங்கின் மனைவி அதிதி சிங்கிடம் இருந்து 217 கோடி ரூபாய் பணமோசடி செய்து வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் உள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.