Advertisment

பொற்கோவிலுக்கு வெளியே சுக்பீர் சிங் பாதல் மீது முன்னாள் தீவிரவாதி துப்பாக்கிச் சூடு: வீடியோ

துப்பாக்கித் தோட்டா சுவரில் பாய்ந்ததால், சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த சிரோமணி அகாலி தளத்தின் (எஸ்.ஏ.டி) முன்னாள் தலைவர் சுக்பீர் சிங் பாதல் காயமின்றி உயிர் தப்பினார்.

author-image
WebDesk
New Update
sukhbir badal shot

அமிர்தசரஸ் பொற்கோயில் வாசலில் சிரோமணி அகாலி தள தலைவர் சுக்பீர் சிங் பாதல் மீது ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். (PTI/ Screengrab)

சிரோமணி அகாலி தளத்தின் (எஸ்.ஏ.டி) முன்னாள் தலைவர் சுக்பீர் சிங் பாதல் புதன்கிழமை காலை அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலின் வாயிலில் காவலாளியாக சேவை செய்துகொண்டிருந்தபோது, ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Watch: Moment when former militant fired at Sukhbir Singh Badal outside Golden Temple

தாக்குதல் நடத்தியவர் நரேன் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் அருகில் இருந்தவர்களால் விரைவாக பிடிக்கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ள நோக்கம் தெளிவாக இல்லை.

Advertisment
Advertisement

அமிர்தசரஸ் கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் (ஏ.டி.சி.பி) ஹர்பால் சிங் கூறுகையில், கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுக்பீர் ஜி சரியாக பாதுகாப்பாக சூழப்பட்டிருந்தார்... தாக்குதல் நடத்திய நாராயண் சிங் சௌரா நேற்றும் இங்கே இருந்தார்... இன்றும் அவர் முதலில் குருவுக்கு வணக்கம் செலுத்தினார்…” என்று ஏ.டி.சி.பி ஹர்பால் சிங் கூறினார்.

இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் பொற்கோவிலுக்கு வந்தார். சிரோமணி அகாலி தளத்தின் (எஸ்.ஏ.டி) தலைவர் தல்ஜித் சிங் சீமா இந்தத் தாக்குதலைக் கண்டித்து, பஞ்சாபை சீர்குலைக்கும் "பெரிய சதி" என்று கூறினார்.

“பஞ்சாபை மீண்டும் நெருப்புக்குள் தள்ள இது ஒரு பெரிய சதி... முதலில், நான் குருநானக்கிற்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஜாகோ ராகே சாயான், மார் சாகே நா கோய். ‘சேவகர்கள்’ இங்கு ‘சேவா’ வழங்கிக் கொண்டிருந்தனர். எஸ்.ஏ.டி தலைவர் சுக்பீர் சிங் பாதல், குரு ராம் தாஸ் துவார் 'சௌகிதாராக' அமர்ந்திருந்தார். அவரை நோக்கி தோட்டா சுடப்பட்டுள்ளது... குரு நானக்கின் 'சேவக்கை' காப்பாற்றியதற்காக நான் நன்றி கூறுகிறேன்... இது ஒரு பெரிய சம்பவம், பஞ்சாப் எந்த சகாப்தத்திற்கு தள்ளப்படுகிறது?... பஞ்சாப் முதல்வரிடம் கேட்க விரும்புகிறேன், நீங்கள் பஞ்சாப்பை எங்கு கொண்டுசெல்ல விரும்புகிறீர்கள்? ... தாக்குதல் நடத்தியவர் சம்பவ இடத்திலேயே பிடிபட்டார். இங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் உடனடியாகச் செயல்படாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்...” என்று சிரோமணி அகாலி தளத்தின் தலைவர் தல்ஜித் சிங் சீமா கூறினார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், பொற்கோவிலில் தங்கள் ‘சேவை’ தொடர கட்சியின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment