scorecardresearch

மத்திய பிரதேசத்தில் 2 போர் விமானங்கள் விபத்து; ஒரு விமானி மரணம்

IAF இன் சுகோய்-30 மற்றும் மிராஜ் விமானம் மத்திய பிரதேசத்தில் விபத்துக்குள்ளானது. இதில், 2 விமானிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர், ஒருவரைக் காணவில்லை

மத்திய பிரதேசத்தில் 2 போர் விமானங்கள் விபத்து; ஒரு விமானி மரணம்
IAF இன் சுகோய்-30 மற்றும் மிராஜ் விமானம் மத்திய பிரதேசத்தில் விபத்துக்குள்ளானது (படம் – ஏ.என்.ஐ)

இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு போர் விமானங்களான சுகோய் 30 மற்றும் மிராஜ் 2000 ஆகியவை மத்திய பிரதேச மாநிலம் மொரேனா அருகே சனிக்கிழமை காலை விபத்துக்குள்ளானது. ஆரம்ப அறிக்கைகள் நடுவானில் மோதுவதற்கான சாத்தியக்கூறுகளை சுட்டிக்காட்டினாலும், அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.

IAF இன் சுகோய்-30 மற்றும் மிராஜ் விமானம் மத்திய பிரதேசத்தில் விபத்துக்குள்ளானது. இதில், 2 விமானிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர், ஒருவரைக் காணவில்லை.

இதையும் படியுங்கள்: சிந்து நதி நீர் ஒப்பந்தம்; 62 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தம் செய்ய பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ்

விமானிகளின் நிலை மற்றும் விபத்திற்கு வழிவகுத்த காரணம் என்ன என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. தற்போது தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இச்சம்பவம் அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குவாலியர் விமான தளத்தில் இருந்து விமானம் புறப்பட்டதாகவும், அவர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்கான சரியான காரணத்தை அறிய விசாரணை நடத்தப்படும்.

இதற்கிடையில், இரண்டு விமானங்கள் விபத்துக்குள்ளானது குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் IAF தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் V.R சவுதாரி விளக்கியதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. பாதுகாப்பு அமைச்சர் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

2021 டிசம்பரில், இரண்டு ஆண்டுகளில் ஏழு IAF விமானங்கள் விபத்துக்குள்ளானதாக அரசாங்கம் பாராளுமன்றத்தில் தெரிவித்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Sukhoi 30 mirage aircraft crash morena madhya pradesh rescue