/tamil-ie/media/media_files/uploads/2020/07/template-2020-07-06T194736.739.jpg)
sumalatha ambareesh, sumalatha, sumalata, sumalatha ambareesh coronavirus, sumalatha coronavirus, sumalata coronavirus, sumalatha ambareesh covid19, sumalatha covid19, sumalata covid19
தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக, நடிகையும், அரசியல்வாதியுமான சுமலதா அம்பரீஷ் தெரிவித்துள்ளார்.
https://www.facebook.com/SumalathaAmbi/posts/900728177071075
இதுதொடர்பாக, சுமலதா தனது பேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த சனிக்கிழமை, தனக்கு தலைவலியும், தொண்டை வலியும் ஏற்பட்டது. கொரோனா பாதிப்பு பகுதிகளில் தொடர் ஆய்வுகளில் மேற்கொண்டிருந்ததாலேயே, இந்த பாதிப்பு என்பதை அறிந்த நான், கொரோனா சோதனை செய்துகொண்டேன். இன்று சோதனை முடிவு வந்தது. அதில், கொரோனா பாசிட்டிவ் என்பது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
டாக்டர்களின் அறிவுரைப்படி, வீட்டில் நான் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையான தொடர்பு தடமறிதல் நிகழ்வில் பங்கேற்றுள்ள அதிகாரிகளுடன் சமீபத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்தேன். அவர்களை தொடர்ந்து சந்தித்து வந்துள்ளேன். அவர்களிடமிருந்து தொடர்ந்து அறிக்கைகளை பெற்றுவந்ததுள்ளேன்.
நான் மிகுந்த உடல்நலத்துடன் உள்ளவள் என்பதாலும், மக்களின் ஆசி தனக்கு உள்ளதாலும். விரைவில் இந்த பாதிப்பிலிருந்து நலம் பெறுவேன் என்று அந்த பதிவில் சுமலதா குறிப்பிட்டுள்ளார்.
சுமலதா, கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான அம்பரீஷின் மனைவி ஆவார். கடந்தாண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், மாண்டியா தொகுதியில், முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரை தோற்கடித்து மாநிலங்களவை உறுப்பினர் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க - Sumalatha Ambareesh tests positive for coronavirus
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.