கர்நாடக மாநிலத்தில் மாநில பள்ளிக் கல்வித் துறையால் நடத்தப்பட்ட கர்நாடக ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு-2022க்கான ஹால் டிக்கெட்டில் தேர்வரின் புகைப்படத்திற்குப் பதிலாக சன்னி லியோனின் படம் இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், சிவமொக்காவில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்திருந்தார். இதற்கான தேர்வு கடந்த நவம்பர் 6 ஆம் தேதி கர்நாடகாவில் 781 மையங்களில் நடத்தப்பட்ட நிலையில். மொத்தம் 3,32,913 பேர் தேர்வு எழுதினர்.
இதில் தேர்வு எழுதிய ஒருவரின் ஹால் டிக்கெட்டில் அவரது படத்திற்கு பதிலாக நடிகை சன்னி லியோனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள பொது அறிவுறுத்தல் துறை, “தவறு அரசாங்கத்திலோ அல்லது கல்வித் துறையிலோ இல்லை” என்று கூறியுள்ளது.
மேலும் இந்த சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தேர்வர் தனது விண்ணப்பம், ஆவணங்கள் மற்றும் புகைப்படத்தை மற்றொருவரின் உதவியுடன் பதிவேற்றம் செய்துள்ளார். இது தொடர்பான“முதற்கட்ட அறிக்கையின்படி, தேர்வருக்கு தெரிந்த மற்றொரு நபர் புகைப்படம் உட்பட விண்ணப்பப் படிவத்தை தேர்வருக்காக பதிவேற்றம் செய்து கொடுத்துள்ளார். ஆனால் அந்த நபர் ஏன் தேர்வரின் படத்திற்கு பதிலாக நடிகையின் படத்தைப் பயன்படுத்தினார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. தேர்வரும் விபரங்களை பதிவேற்றம் செய்த நபரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் தொடங்கப்படும், ”என்று அந்த அதிகாரி கூறினார்.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ""ஆன்லைனில், உள்நுழைவு அடையாள அட்டை மற்றும் கடவுச்சொல்லை உருவாக்கி, விண்ணப்பத்தை தாக்கல் செய்ய வேண்டும். உள்நுழைவுச் சான்றுகள் தனிப்பட்டவை என்றும் வேறு யாருக்கும் தெரிவிக்கப்படுவதில்லை என்றும் அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. தேர்வரின் புகைப்படத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலைப் பதிவேற்றுவது உட்பட விண்ணப்பத்தின் விவரங்களை நிரப்ப அதே உள்நுழைவு சான்றுகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு விண்ணப்பதாரர் விவரங்களை குறுக்கு சோதனை செய்து பின்னர் விண்ணப்பத்தின் பிரிண்ட் அவுட் எடுத்து ஹால்டிக்கெட் பெறலாம்.
மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணைக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாகவும், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“