பணி நேரத்திற்கு முன்பாக வர வற்புறுத்திய கண்காணிப்பாளர்: காரைக்காலில் மருத்துவ ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

காரைக்காலில் அரசு மருத்துவமனை ஊழியர்களை பணி நேரத்திற்கு முன்னதாக வர வற்புறுத்திய மருத்துவ கண்காணிப்பாளரைக் கண்டித்து மருத்துவமனை ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காரைக்காலில் அரசு மருத்துவமனை ஊழியர்களை பணி நேரத்திற்கு முன்னதாக வர வற்புறுத்திய மருத்துவ கண்காணிப்பாளரைக் கண்டித்து மருத்துவமனை ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Superintendent forces govt's hospital staff to come earlier than usual in Karaikal Medical staff stage sit-in protest

காரைக்காலில் அரசு மருத்துவமனை ஊழியர்களை பணி நேரத்திற்கு முன்னதாக வர வற்புறுத்திய மருத்துவ கண்காணிப்பாளரை கண்டித்து மருத்துவமனை ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

காரைக்கால் மாவட்டம் அரசு பொது மருத்துவமனையில் செவிலியர்கள் மருந்தாளுனர்கள் உதவியாளர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் பரிசோதனை கூட ஊழியர்கள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை, மதியம் இரண்டு முதல் மாலை எட்டு மணி வரை, இரவு 8 மணி முதல் மறுநாள் காலை எட்டு மணி வரை என மூன்று பணி நேரங்கள் ஒதுக்கப்பட்டு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் காலை 8 மணிக்கு வரும் ஊழியர்களை 7.30 மணிக்கு வர மருத்துவ கண்காணிப்பாளர் வற்புறுத்தியதோடு 7:30 க்கு முன்னதாக வராத ஊழியர்களுக்கு வருகை பதிவேட்டில் அவர்கள் இன்று பணிக்கு வரவில்லை என குறிப்பிட்டு இருப்பது ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனை அடுத்து மருத்துவ கண்காணிப்பாளரிடம் முறையிட்ட ஊழியர்களுக்கு உரிய பதில் அளிக்காததால் பணியை புறக்கணித்து உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் நோயாளிகள் அவதிக்குள்ளானார்கள். இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு வெளி நோயாளிகளாக வந்திருந்த பொதுமக்கள் மருத்துவமனை ஊழியர்களுக்கு ஆதரவாக அரசு பொது மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

செய்தி: பாபு ராஜேந்திரன்

Karaikkal

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: