100 நாள் சிறைவாசத்துக்கு பிறகு ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்: உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு

Verdict on P.Chidambaram bail petition today : அமலாக்கத்துறை வழக்கில் இருந்து ஜாமின் கேட்டு மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில், இன்று காலை 10.30 மணியளவில் தீர்ப்பை வாசித்த உச்சநீதிமன்றம் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.  

Tamil Nadu news today Live updates
Tamil Nadu news today Live updates

Supreme Court verdict on P.Chidambaram bail petition today Live Updates : காங்கிரஸ் ஆட்சியில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்த போது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தில் ரூ.305 கோடி அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக சர்ச்சை வெடித்தது. இந்த புகாரில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான நிறுவனம் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதுகுறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதன் விசாரணையில் கடந்த 21ஆம் தேதி, ப.சிதம்பரத்தை அவரது வீட்டில் வைத்து சிபிஐ கைது செய்தது.


ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ வழக்கு நீதிமன்றக் காவலில் இருந்து ப.சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கப்பட்டபோதிலும் , இதே வழக்கு தொடர்பான பணப் பரிமாற்ற வழக்கில் அக்டோபர் 16-ம் தேதி அமலாக்கத்துறையும் கைது செய்த காரணத்தால், இன்னும் திகார் சிறையினுள் அடைக்கப்பட்டுள்ளார்.

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து ஜாமின் கேட்டு மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில், ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது

மெரினாவில் நுரை தள்ளியதற்கு அரசு அலட்சியம் காரணமா?

இதனைத் தொடர்ந்து வரும் அரசியல் நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளோக்கில் காணலாம்.

Live Blog

Verdict on P Chidambaram bail petition today live  Updates  :   உச்ச நீதிமன்றம்  ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கி  உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வரும்  அரசியல் நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளோக்கில் காணலாம்.


11:48 (IST)04 Dec 2019

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் நடைபெற்ற இரு தரப்பு வாதம் (2/2)

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு சார்பாக  கபில் சிபல், ஏ.எம்.சிங்வி போன்ற மூத்த வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள்.

ப. சிதம்பரம் சார்பான வாதத்தில், பதிவு செய்யப்பட்ட குற்றங்கள் தொடர்பாக இதுவரை அமலாக்கதுறை இதுவரை எந்த ஆதாரங்களையும்  (நேரடியாகவோ, மறைமுகமாகவோ ) நிரூபிக்கப்படவில்லை , மேலும் தொடர்புடைய சாட்சிகளை கலைக்க ப. சிதம்பரம் முற்பட்டார் என்பதும்  இந்த நீதிமன்றத்தில் நிரூபணம் செய்யவில்லை என்று வாதாடினர்   

11:34 (IST)04 Dec 2019

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் நடைபெற்ற இரு தரப்பு வாதம் (1/2 )

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துரை பதிவு செய்யப்பட்ட வழக்கில் கடந்த மாதம் நவம்பர் 15ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இதனையடுத்து, ப.சிதம்பரம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

உச்சநீதிமன்றத்தில் நடந்த  மேல்முறையீடு வழக்கில், அமலாக்கத் துறை சார்பாக ஆஜரான அரசு வழக்கறிஞர் தனது வாதத்தில், முன்னாள் நிதி மந்திரி ப,சிதம்பரம் காவலில் இருக்கும் போது கூட, இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய சாட்சிகள் மீது கணிசமான செல்வாக்கு கொண்டிருந்தார் , ஜாமீனில் வெளியிட்டால் வழக்கின் போக்கையே மாற்றும் சூழல் உருவாகும்  என்று வாதிட்டார். மேலும்,  பணமோசடி போன்ற பொருளாதார குற்றங்கள் அதிகாரத்தில் உள்ளவர்களால் செய்யப்படும் போது  மிகவும் கொடியவைகளாக உள்ளது.  ஏனெனில் அவை நாட்டின் பொருளாதாரத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல்,  ஜனநாயக  அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கையை கேள்விக்குறியாக்குகின்றன. 

10:46 (IST)04 Dec 2019

சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம் :

அமலாக்கத் துறையால்  கைது செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கி தற்போது உத்தரவிட்டுள்ளது. சாட்சியங்களை கலைக்கும் செயல்களில் ஈடுபடக் கூடாது , இந்த வழக்கு தொடர்பாக பத்திரிகை நேர்காணல்களை அளிக்கக் கூடாது,   பகிரங்கமாக வழக்கு தொடர்பான  ஆவணங்களை வெளியிடக்  கூடாது போன்ற  நிபந்தனைகளை உச்சநீதிமன்றம் விடுத்துள்ளது 

10:24 (IST)04 Dec 2019

கார்த்தி சிதம்பரம் , கபில் சிபல் உச்சநீதிமன்றம் விரைகின்றனர்

கார்த்தி சிதம்பரம், கபில் சிபல் ஆகியோர் உச்சநீதிமன்றத்திற்கு நோக்கி விரைகின்றனர். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத் துறை காவலில் இருந்து ஜாமீன் வழங்கக் கோரிய  ப.சிதம்பரத்தின் மேல்முறையீடு வழக்கின் தீர்ப்பு  இன்னும் சற்று நேரத்தில் வெளியாகிறது. 

 

10:02 (IST)04 Dec 2019

ப.சிதம்பரம் ஜாமீன் மேல்முறையீடு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு

டெல்லி உயர்நீதிமன்றம் அமலாக்கத் துறை கைது செய்யப்பட்ட வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் தர மறுத்ததை அடுத்து , உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.   கடந்த நவம்பர் மாதம் 28ம் ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து முடித்த   உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை ரிசர்வ்ட் செய்தது. இந்நிலையில், நீதிபதிகள் பானுமதி, போபண்ணா  ரிஷிகேஷ் ராய் ஆகியோரைக் கொண்ட  பெஞ்ச் இன்று காலை 10.30 மணியளவில் ப.சிதம்பரம் மேல்முறையீடு வழக்கின் தீர்ப்பை  தரவுள்ளனர் .      

Verdict on P Chidambaram bail petition today Live Updates :  ப.சிதம்பரத்தை கடந்த மாதம் நவம்பர் 27ம் தேதியன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் திகார் சிறையில் சந்தித்தனர். சுமார் 50 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது.

பொருளாதாரத்துக்கும், மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் (ஜிடிபி) எந்த சம்பந்தமும் இல்லை, அதை ‘பைபிள், ராமாயணம் மற்றும் மகாபாரதம்’ என்று கருதக்கூடாது என கருத்துக் கூறிய  பாஜக மக்களவை உறுப்பினர் நிஷிகாந்த் துபே கருத்துக்கு, ” இந்திய பொருளாதாரத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் ” என்று தனது ட்விட்டரின் மூலம் ப.சிதம்பரம் கருத்து கூறியிருந்தார்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Suprecme court verdict on p chidambaram bail petition today live updates p chidambaram inx media case bail updates live

Next Story
இந்தியர்கள் இனவெறியர்களா? உண்மை என்ன?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com