Advertisment

இடஒதுக்கீட்டின் பயன் உண்மையான பயனாளர்களுக்கு கிடைக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்

Supreme court : பழங்குடியின மாணவர்களுக்கு அதே பிரிவை சேர்ந்தவர்களே பாடம் கற்பிக்க வேண்டும் என்ற யோசனை அபத்தமானது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Supreme court, Tamil news today live

Tamil news today live

Ananthakrishnan G

Advertisment

மத்திய, மாநில அரசின் சலுகைகள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவை சேர்ந்த உண்மையான பயனாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதை அரசுகள் உறுதி செய்ய வேண்டும். இடஒதுக்கீட்டின் பயன்களை அப்பிரிவுகளில் உள்ள வசதி படைத்தோர் அதிகம் பெறாதவண்ணம் அவ்வப்போது இடஒதுக்கீடு முறைகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆந்திரபிரதேச மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்களை கொண்டே 100 சதவீத பணியிடம் நிரப்பப்பட வேண்டும் என 2000மாவது ஆண்டில் சட்டம் இயற்றப்பட்டு இருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வின் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த உத்தரவு, தாழ்த்தப்பட்ட பிரிவு மக்களிடையே வேற்றுமை ஏற்படுத்துவதாக உள்ளது. எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவுகளில், வசதி படைத்தவர்களும், பொருளாதாரம் மற்றும் சமூக அளவில் மேம்பாடு அடைந்தவர்கள் உள்ளனர். தாழத்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படவும், அவர்கள் பொருளாதார ஏற்றம் பெறவுமே இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், இந்த சட்டத்தின் பலன், எஸ்சி, எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த உண்மையான பயனாளர்களுக்கு சென்று சேர்வதில்லை. இந்த சட்டத்தின் மூலமான பயன்களத பெறவே கடுமையாக நாங்கள் பேராாட வேண்டியுள்ளது.

நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி, வீனீத் சரண், எம் ஆர் ஷா மற்றும் அனிருத்தா போஸ் அடங்கிய அமர்வு, இடஒதுக்கீடு முறைகளில் அவ்வப்போது மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவானின் பரிந்துரைக்கு இசைவு தெரிவித்தனர்.

ஆந்திர அரசு, இந்த இடஓதுக்கீடு முறையை பரிசீலனை செய்ய வேண்டும். இந்த பரிசீலனையின் போது உண்மையான பயனாளர்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கடந்த 70 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள இந்த இடஒதுக்கீடு நடைமுறையில், போதுமான முன்னேற்பாடுகள், நடவடிக்கைகள் இந்திரா ஷாவ்னே பரிந்துரையின்படி அமல்படுத்தப்பட வேண்டும் என்ற டாக்டர் ராஜீவ் தவானின் கருத்தை இந்த அமர்வு ஏற்றுக்கொள்கிறது.

200மாவது ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், 3/2000 அரசாணையின்படி, 100 சதவீத அனுமதி என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இந்திரா ஷாவ்னி பரிந்துரையில் இது 50 சதவீதம் என்றே இருந்தது என்று அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.

1992ம் ஆண்டில், உச்சநீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு, இந்திரா ஷாவ்னி உள்ளிட்டோரின் பரிந்துரைகளை ஏற்று 50 சதவீதமே அதிககபட்சமாக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இடஒதுக்கீடு என்பது வளர்ச்சி அடையாத சமூகத்தை பாதுகாக்கவும், பொருளாதார ரீதியாக அவர்களை மேம்படுத்தவும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் இதில் 100 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படின், அது முறைகேடுகளுக்கே வழிவகுக்கும். எனவே இதை அனுமதிக்க இயலாது. பொது பணிவாய்ப்புகளை ஒரு குறிப்பிட்ட சமூக மக்களுக்கு என்று சுருக்கிவிட முடியாது. இது அனைத்து மக்களுக்கும் பொதுவானதே. இந்திய மக்கள் அனைவருக்கும் சம உரிமை கிடைக்கப்பட வேண்டும். அனைவருக்கும் அனைத்து இடங்களிலும் சமமான வாய்ப்பு கிடைக்கப்பெறுவதையே இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய சட்ட மேதை அம்பேத்கரின் லட்சியமாக இருந்தது. பணியடங்களில் சம வாய்ப்பு என்பது சட்டப்பிரிவு 51 ஏ வில் குறிப்பிடப்பட்டுள்ளது இதை நாம் மீறக்கூடாது என்று அமர்வு தெரிவித்துள்ளது.

இந்த இடத்தில் பழங்குடியினருக்கு 100 சதவீத இடஒதுக்கீடு என்பது தாழ்த்தப்பட்டோர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் உள்ளடக்கியதே ஆகும். ஒரு சாரார் மட்டும் பயன்பெறும் வகையில் இருப்பது ஓருபோதும் இடஒதுக்கீடு ஆகிவிடாது என்று இந்திரா ஷாவ்னி மேற்கோள் காட்டியுள்ளார்.

2000மாவது ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு, சட்டப்பிரிவு 14, 15 மற்றும் 16 பத்திகளை மீறுவதாக உள்ளது. இந்த 100 சதவீத இடஒதுக்கீட்டை, இதுவரை பழங்குடியினர் மற்றும் மேம்படுத்தப்பட்ட (open category) பிரிவினரே பயன்படுத்தி வந்துள்ளனர். இது 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின் கீழே அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்திருந்தது.

மாநில அரசின் இந்த வாதத்தை நிராகரித்த அமர்வு, தாழ்த்தப்பட்டோர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒரு பிரிவினருக்கு மட்டும் 100 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவதை ஏற்கமுடியாது. பழங்குடியின மாணவர்களுக்கு அதே பிரிவை சேர்ந்தவர்களே பாடம் கற்பிக்க வேண்டும் என்ற யோசனை அபத்தமானது. மற்ற பிரிவு மக்கள் சொல்லிக்கொடுத்தால், பழங்குடியினர் மாணவர்களுக்கு புரியாதா?. மாணவர்களின் கல்வித்தரம் அவர்கள் சார்ந்த சமுதாயத்தை வைத்து கணக்கிடப்படுவது ஏற்றுக்கொள்ள இயலாது.

ஆந்திர மாநிலத்தின் இந்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதுவரை பணியமர்த்தப்ட்டவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும், இனிமேல் பணியமர்த்தப்பட உள்ளவர்கள் விவகாரத்தில் மாநில அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் நடக்க வேண்டும் என்று அமர்வு உத்தரவிட்டுள்ளது.

1986ம் ஆண்டில் இந்த உத்தரவை ஆந்திர அரசு பிறப்பித்திருந்த நிலையில், மாநில நிர்வாக தீர்ப்பாயம் அதனை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து ஆந்திர அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், 1998ம் ஆண்டு இந்த தடையுத்தரவு திரும்ப பெறப்பட்டது.

இந்த தடையுத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ள நிலையில், தாங்கள் சட்டவிரோதமாக செயல்படவில்லை என்பது தெளிவாகியுள்ளதாக தெரிவித்திருந்த ஆந்திர அரசு 2000மாவது ஆண்டில் மீண்டும் 3/2000 அரசாணையை பிறப்பித்து பழங்குடியினருக்கு 100 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தியது. இந்திரா ஷாவ்னி உள்ளிட்டோரின் பரிந்துரைகளின் படி மாநில அரசுக்கு 50 சதவீதம் வரை மட்டுமே இடஒதுக்கீடு வழங்க அனுமதி உண்டு. அதற்கு மேற்பட்டால், அது சட்டவிரோதம் என்று அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் நடைமுறையில் உள்ள இந்த சட்டம், சமீபத்தில் ஆந்திராவில் இருந்து பிரிந்த தெலுங்கானாவிலும் நடைமுறையில் இருக்க வாய்ப்பு இருப்பதால், இந்த விவகாரத்தில் இருமாநில அரசுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும்.1986ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் படி அவர்கள் செயல்பட வேண்டும் என்று அமர்வு தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Supreme Court Of India Andhra Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment