வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு ஆஜராகுவதற்கு மொபைல் போன்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு, லேப்டாப் அல்லது டெஸ்க்டாப்களைப் பயன்படுத்த வழக்கறிஞர்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக நீதிமன்றப் பதிவாளர் வெளியிட்ட அறிவிப்பில், "நீதிமன்ற நடவடிக்கைகளில் ஏதேனும் இடையூறு மற்றும் நீதிபதிகளுக்கு சிரமத்தைத் தவிர்ப்பதற்காக, நிலையான இணைய இணைப்பைப் பயன்படுத்துமாறு குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, இந்திய தலைமை நீதிபதி என்.வி. ரமணா, வழக்குகளை விசாரிக்கும் போது, வழக்கறிஞர் மொபைல் போனை உபயோகிப்பதை கண்டு அதிருப்தி அடைந்தார். வழக்கறிஞர் தெளிவாக தெரியவில்லை என்றும், ஆடியோ சரியாக கேட்கவில்லை எனவும் கூறினார்.
மற்றொரு வழக்கறிஞரிடம் பேசிய தலைமை நீதிபதி, மொபைல் போன்களில் தோன்றும் வழக்கறிஞர்களை சரியாக பார்க்கமுடியவில்லை. மொபைல் வணிகத்தை தடை செய்ய வேண்டியிருக்கலாம். நீஉச்ச நீதிமன்றத்தில் பயிற்சி செய்கிறீர்கள். தொடர்ச்சியாக ஆஜராகுகிறீர்கள். வாதாடுவதற்கு ஒரு டெஸ்க்டாப்வைத்திருக்க முடியாதா?” என கேள்வி எழுப்பினார்.
ஊர்தி எண்ணிக்கை
பாஜகவின் போட்டி கட்சிகள் ஆளும் கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-ம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, மேற்கு வங்கத்தின் சார்பில் அவரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையிலான அலங்கார ஊர்திகளில் சிறப்பாகத் தயார் செய்யப்பட்டுள்ளது. ஆனால், மாநில ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த மத்திய அரசு, நிபுணர் குழு தான் அலங்கார ஊர்தியை முடிவு செய்கின்றன. இந்த ஆண்டு 56 முன்மொழிவுகளில் 21 மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என தெரிவித்தனர்.
மோடி பிரதமராக இருந்தபோதும், இந்த மாநிலங்கள் முந்தைய குடியரசு தினக் கொண்டாட்டங்களில் தங்கள் ஊர்திகளை அணிவகுத்தன. கேரளா மாநில ஊர்தி 2018, 2021 ஆம் ஆண்டுகளிலும், தமிழ்நாடு ஊர்தி 2018ஐ தவிர மற்ற ஆறு ஆண்டுகளிலும், மேற்கு வங்கத்தின் ஊர்தி 2016,2017,2019,2021 ஆம் ஆண்டுகளிலும் அணிவகுப்பில் வளம்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
களமிறங்கும் பாஜக முக்கிய தலைவர்கள்
பாஜக அறிவித்த முதல் கட்ட வேட்பாளர் பட்டியலிலே முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோர் இடம்பெற்றுள்ள நிலையில், மற்றொரு துணை முதல்வரான தினேஷ் ஷர்மா மீது கட்சி வட்டாரங்களில் ஊகங்கள் எழுந்துள்ளன.
ஆறாவது மற்றும் ஐந்தாம் கட்டத்தில் தேர்த்ல நடைபெறவுள்ள கோரக்பூர், சிரத்து பகுதிகளில் ஆதித்யநாத் மற்றும் மவுரியாவின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது,மவுரியாவின் நிலையை உயர்த்தியுள்ளதாக கட்சித் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். அவர் இப்போது மிகவும் குறிப்பிடத்தக்க நபராகக் காணப்படுகிறார் என்றனர்.
முக்கிய ஓபிசி முகமான சுவாமி பிரசாத் மவுரியா வெளியேறியதை தொடர்ந்து, கேசவ் பிரசாத் மவுரியாவும் பிரச்சார வீடியோக்களில் முக்கியமாக இடம்பெற்று வருகிறார்.
அதேபோல், ஆதித்யநாத் மற்றும் மவுரியா போல் எம்எல்ஏ-வாக சர்ஷா எப்போது அறிவிக்கப்படுவார், எந்த தொகுதியில் களமிறக்கப்படுவார் என கட்சி தொண்டர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.