அயோத்தி தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் : ராமர் கோவில் கட்டலாம்... இஸ்லாமியர்களுக்கு மாற்று நிலம்!

கோவில் கட்டுவதற்காக அறக்கட்டளை ஒன்றை அடுத்த மூன்று மாதத்துக்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும்.

கோவில் கட்டுவதற்காக அறக்கட்டளை ஒன்றை அடுத்த மூன்று மாதத்துக்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Supreme Court Ayodhya judgment highlights, Ayodhya land dispute case final verdict live updates

Supreme Court Ayodhya judgment highlights :  ராம் ஜென்மபூமி - பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு இன்று உச்ச நீதிமன்றம் வழங்கியது. ஐந்து நீதிபதிகளும் இணைந்து ஒரே தீர்ப்பினை வழங்கியது. அதன்படி இஸ்லாமியர்கள் தங்களின் மசூதியை அமைத்துக் கொள்ள 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க வேண்டும் என்றும் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  எஸ்.ஏ. பாப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷன், மற்றும் எஸ். அப்துல் நாஸீர் மற்றும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இந்த தீர்ப்பினை வழங்கியது.

Advertisment

தீர்ப்பின் முக்கியம்சங்கள்

ஐந்து நீதிபதிகளும் ஒரே மாதிரியான தீர்ப்பை / ஒரே தீர்ப்பை வழங்கினர்.

மதங்கள் மற்றும் இறையியல் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது சரியானது இல்லை

இஸ்லாமியர்கள் தங்களின் பாபர் மசூதிக்கு ஈடாக 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்கப்பட வேண்டும்.

Advertisment
Advertisements

சன்னி வக்பு வாரியம் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் மாற்று நிலத்தை வழங்க வேண்டும்.

நிர்மோகி அகாராவின் மனு நிராகரிக்கப்பட்டது.

கோவில் கட்டுவதற்காக அறக்கட்டளை ஒன்றை அடுத்த மூன்று மாதத்துக்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும். இந்த கோவில் விவகாரம் முழுவதும் அந்த அறக்கட்டளையே இனி மேற்கொள்ளும்.

நிர்மோகி அகாரா இந்த அறக்கட்டளையின் ஒரு உறுப்பினராக செயல்படும்.

இந்திய தொல்லியல் துறை வெளியிட்ட அறிக்கையை நிராகரிக்க இயலாது,

இந்திய தொல்லியல் துறை பாபர் மசூதி காலி இடத்தில் கட்டப்படவில்லை என்று அறிக்கை வெளியிட்டது.

பாபர் மசூதிக்கு கீழே இருக்கும் கட்டிட அமைப்பு இஸ்லாமிய முறைப்படி கட்டப்படவில்லை.

12ம் நூற்றாண்டின் போது அந்த பகுதியில் கட்டிடம் ஒன்று இருந்ததிற்கான ஆதாரங்கள் இருக்கிறது.

சர்ச்சைக்குரிய இடத்திற்கு அருகே ராமர் பிறப்பிடம் இருந்ததிற்கான ஆதாரங்கள் இருப்பது மேற்கோள் காட்டப்பட்டது.

1949ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-23 நள்ளிரவில் பாபர் மசூதியின் நடுமாடத்தின் கீழ் இந்து சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் மசூதிக்கு வெளியே சீதா ரசோய், ராம் சாபுத்ரா மற்றும் பந்தர் கிர் சிலைகள் அந்த இடத்தின் மதம் குறித்த ஆதாரங்களாக இன்னும் இருக்கிறது.

மத நம்பிக்கைகள் அடிப்படையில் நிலத்துக்கான உரிமையை வழங்க இயலாது.

சியா வக்பு வாரியம் தொடுத்த வழக்கினை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.

மேலும் படிக்க : Ayodhya Verdict Live : சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை கோவில் கட்ட அறக்கட்டளைக்கு வழங்க உத்தரவு!

Babri Masjid Ram Temple Ayodhya Temple

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: