Advertisment

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனு : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சட்டத்தை எதிர்த்து 236 மனுக்களும், விதிகளை எதிர்த்து 20 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

author-image
WebDesk
New Update
Supreme Court India

உச்ச நீதிமன்றம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், இது குறித்து 2 வாரங்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ள நிலையில், சட்டம் அமல்படுத்தியதை தடுக்கும் வகையில் எந்த உத்தவும் பிறப்பிக்கப்படவில்லை.

Advertisment

இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்துவதற்காக விதிகளை மத்திய அரசு கடந்த மார்ச் 12-ந் தேதி வெளியிட்டதை தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.  இந்த சட்டத்தின் மூலம் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்குள், அண்டை நாடுகளாக பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து மத அடக்குமுறை காரணமாக இந்தியாவில் குடியேறிய பலருக்கும் குடியுரிமை வழங்க வழி செய்யும்.

ஆங்கிலத்தில் படிக்க : Supreme Court issues notice to Centre on pleas challenging Citizenship Amendment Act, Rules; hearing on April 9

இந்த சட்டத்தை அமல்படுத்த எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கடந்த மார்ச் 12-ந் தேதி இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த சட்டம் அமல்படுத்துவதற்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவில் இந்திய குடியுரிமை சட்டம் அமல்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தது.

அதேபோல் பல தரப்பினரும் இந்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த வழக்கு இந்திய தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, விசாரணை நடத்தியது. இந்த வழக்கு தொடர்பாக 200-க்கு மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் வரும் மார்ச் 19-ந் தேதி (இன்று) இந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெறும் என்று அறிவித்திருந்தது.

அதன்படி இன்று நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில், 2019 குடியுரிமை (திருத்தம்) சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், ஏப்ரல் 2ம் தேதி வரை பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு அவகாசம் வழங்கியுள்ளது. அதன்பிறகு மனுதாரர்கள் ஏப்ரல் 8ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் ஜேபி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை ஏப்ரல் 9ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

இந்த வழக்கில், மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சட்டத்தை எதிர்த்து 236 மனுக்களும், விதிகளை எதிர்த்து 20 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதற்கு பதில் மனு தாக்கல் செய்ய 4 வார கால அவகாசம் அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும் சட்டம் மற்றும் விதிகள் "எந்த நபரின் குடியுரிமையையும் பறிக்காது" என்று தெளிவுபடுத்த முயன்ற மேத்தா, புதிய நபர்களும் குடியுரிமை வழங்கப்படாது என்றும், 2014 க்கு முன் இந்தியாவில் நுழைந்தவர்கள் மட்டுமே இந்த குடியுரிமை திருத்த சட்டத்தில் பரிசீலிக்கப்படுகிறார்கள் என்றும் கூறியிருந்தார்.  

குடியுரிமை திருத்த சட்டத்தின் தகுதிகள் குறித்து அவர் வாதிட்டதால், மனுதாரர்களையும் விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் எச்சரித்தது. இது குறித்து ஒரு மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு நிலுவையில் உள்ள குடியுரிமை சட்டத்திற்கு வழங்கப்பட மாட்டாது அல்லது விதிகளின் கீழ் வழங்கப்படும் எந்தவொரு குடியுரிமையும் அதன் நிலுவையில் உள்ள வழக்கின் தீர்ப்புகளுக்கு உட்பட்டது என்று உத்தரவில் கூறுமாறு நீதிமன்றத்தை வலியுறுத்தினார். 

ஆனால் இந்த கோரிக்கை மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க மறுத்த நீதிமன்றம் "அவர்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் கூட இல்லை - மாவட்ட அதிகாரமளிக்கப்பட்ட குழு, மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழு, எதுவும் நடைமுறையில் இல்லை" என்று தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார். மேலும், மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “இதுபோன்ற சம்பவம் நடந்தவுடன், நீதிமன்றத்தை அணுக எங்களுக்கு சுதந்திரம் கொடுங்கள்என்று கோரிக்கையை முன்வைத்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Supreme Court Of India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment