/tamil-ie/media/media_files/uploads/2023/07/supreme-court-1.jpg)
மணிப்பூரில் நடந்ததை மற்ற இடத்திலும் நடக்கிறது என கூறி நியாயப்படுத்த முடியாது: தலைமை நீதிபதி சந்திரசூட்
மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கையாள்வதற்கு விரிவான பொறிமுறையை உருவாக்குவதற்கு உச்ச நீதிமன்றம் இன்று அழைப்பு விடுத்துள்ளது. மே மாதத்தில் இருந்து மணிப்பூர் மாநிலத்தில் இதுபோன்ற சம்பவங்களில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.
மணிப்பூரில் நடந்த வன்முறை தொடர்பான மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட், வடகிழக்கு மாநிலத்தில் நடந்ததை நாட்டில் மற்ற இடங்களிலும் நடக்கிறது என்று கூறி நியாயப்படுத்த முடியாது என்று கூறினார்.
“வகுப்புவாத மற்றும் மதவெறி வன்முறைகளில் பெண்களுக்கு எதிரான முன்னெப்போதும் இல்லாத அளவில் நடக்கும் வன்முறையை நாம் கையாளுகிறோம். ஆனால், பெண்களுக்கு எதிராக வங்காளத்திலும் குற்றங்கள் நடக்கின்றன என்று கூற முடியாது. ஆனால் இங்கே நிலைமை வேறு. மணிப்பூர் வழக்கில் உங்களிடமிருந்து என்ன ஆலோசனை இருக்கிறது என்று சொல்லுங்கள்? மணிப்பூரில் நடந்ததை வேறு இடத்திலும் நடந்துள்ளது என்று கூறி நியாயப்படுத்த முடியாது” என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறினார்.
மணிப்பூரில் 2 பழங்குடியினப் பெண்களை நிர்வாணமாக ஊர்வலமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை ‘கொடூரமானது’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு குறிப்பிட்டனர்.
கடந்த மே 4-ம் தேதி நடந்த இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தபோது, காவல்துறை முதல் தகவல் அறிக்கை வழக்குப் பதிவு செய்வதற்கு 14 நாட்கள் எடுத்துக்கொண்டது ஏன் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கையாள்வதற்கான ஒரு விரிவான பொறிமுறையை உருவாக்குவதற்கு உச்ச நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது. மே மாதத்தில் இருந்து மாநிலத்தில் இதுபோன்ற சம்பவங்களில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மணிப்பூர் வன்முறை தொடர்பான விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிப்பதால் இந்திய அரசு ஆட்சேபனை இல்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்பு தெரிவித்தார். தொடக்கத்தில், மணிப்பூரில் மே 4-ம் தேதி 2 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் செல்லப்படும் வீடியோவில் காணப்பட்ட இரண்டு பெண்களுக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அவர்கள் இந்த விவகாரத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகக் கூறினார்.
வன்முறை நடக்கும் மணிப்பூரில் இரு பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் செல்லும் வீடியோவால் “ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக” ஜூலை 20-ம் தேதி உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.
இந்த வீடியோவை கவனத்தில் கொண்டு, இந்திய தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கவும் மத்திய அரசு மற்றும் மணிப்பூர் அரசுக்கு உத்தரவிட்டது.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் 2 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்றது தொடர்பான வழக்கின் விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றியுள்ளதாகவும், “பெண்களுக்கு எதிரான எந்தவொரு குற்றத்தையும் அரசாங்கம் பொறுத்துக்கொள்ளாது” என்று
ஜூலை 27ம் தேதி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
உள்துறை அமைச்சகம் (எம்.ஹெச்.ஏ), உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா மூலம் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், இந்த வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணையை மணிப்பூருக்கு வெளியே உள்ள நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றத்தை வலியுறுத்தியது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.