Advertisment

நீதிபதிகள் தேடல் குழு ஒரு ‘உதவியாளர்’ மட்டுமே, முடிவு கொலீஜியத்திடம் இருக்கும்: அரசு

ஜனவரி 6 ஆம் தேதி, மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதியிருந்தார், அதில், நீதிபதிகள் நியமனத்தில் அரசாங்கத்தின் பிரதிநிதிகளைக் கொண்ட தேடல் மற்றும் தேர்வுக் குழுவைச் சேர்க்க பரிந்துரைத்தார்.

author-image
WebDesk
New Update
rijiju

Union Law Minister Kiren Rijiju

நீதிபதிகளைப் பரிந்துரைக்கும் இறுதி முடிவு கொலீஜியத்திடம் இருக்கும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய அரசாங்கம், இந்தியத் தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்துள்ள ’தேடல் மற்றும் தேர்வுக் குழு’ ஒரு உதவி செய்பவராக மட்டுமே செயல்படும் என்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.

Advertisment

பல பரிந்துரைகளைத் தவிர, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் கொலீஜியத்துக்கு, உதவுவதற்காக உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மட்டங்களில் ஸ்கிரீனிங் மற்றும் மதிப்பீட்டுக் குழுவையும் அரசாங்கம் பரிந்துரைத்தது, என்று சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தது.

இந்த கமிட்டிகள் வருங்கால விண்ணப்பதாரர்களின் தகுதியை மதிப்பிடுவதோடு தொடர்புடைய விஷயங்களை ஆராய வேண்டும், மேலும் அவை ஒரு உதவியாளராக மட்டுமே இருக்கும். ஏனெனில் பரிந்துரை செய்வதற்கான முடிவு இன்னும் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் கொலீஜியத்திடம் இருக்கும், என்று அது கூறியது.

காங்கிரஸ் தலைவர் முகுல் வாஸ்னிக் (கேள்வி எண்: 119), நீதிபதிகளைத் தேர்வு செய்ய அரசாங்கம் அதன் பரிந்துரையாளரைக் கொண்ட தேடல் குழுவை நாடியுள்ளதா என்றும் நீதித்துறையின் பதிலையும் கேட்டிருந்தார்.

மற்றொரு பதிலில் ஐக்கிய ஜனதா தளம் JD(U) தலைவர் ராம் நாத் தாக்கூருக்கு (கேள்வி எண்:117), இந்த பரிந்துரை 2015 ஆம் ஆண்டிலும் செய்யப்பட்டது என்றும் உச்சநீதிமன்றம், அத்தகைய குழுக்களை அமைக்க ஒப்புக்கொள்ளவில்லை, என்றும் நீதித்துறை கூறியது.

ஜனவரி 6 ஆம் தேதி, மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதியிருந்தார், அதில், நீதிபதிகள் நியமனத்தில் அரசாங்கத்தின் பிரதிநிதிகளைக் கொண்ட தேடல் மற்றும் தேர்வுக் குழுவைச் சேர்க்க பரிந்துரைத்தார்.

119வது கேள்விக்கான பதிலில், நீதித்துறையானது, நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான நடைமுறையின் குறிப்பானை (Mop) "இறுதிப்படுத்தல் நிலுவையில் உள்ளது, என்று அடிக்கோடிட்டுக் காட்டியது.

2017 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒருமனதாக அளித்த தீர்ப்பை அரசாங்கம் மேற்கோள் காட்டியது. அதில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், கேள்வி 117 க்கு அதன் பதிலில், நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான நடைமுறை குறிப்பானை (MoP) 2017 இல் இறுதி செய்யப்பட்டது என்று அரசாங்கம் கூறியது.

தாக்கூரின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அது கூறுகையில்: மேற்கண்ட உத்தரவுகளின்படி, இந்திய அரசு, உரிய கவனத்திற்குப் பிறகு, 22.3.2016 அன்று மாண்புமிகு இந்திய தலைமை நீதிபதிக்கு  நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான நடைமுறை குறிப்பாணை (MoP) அனுப்பியது, திருத்தப்பட்ட உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பதில் வரைவு MoP 25.05.2016 மற்றும் 01.07.2016 அன்று பெறப்பட்டது.

உச்ச நீதிமன்ற கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில் அரசின் பார்வை 03.08.2016 அன்று தலைமை நீதிபதிக்கு தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அப்போதைய இந்தியத் தலைமை நீதிபதி, 13.03.2017 தேதியிட்ட கடிதத்தை, MoPக்கு அனுப்பியது.

கர்ணன் தீர்ப்பில், நீதிபதிகள் ஜே.செலமேஸ்வர் மற்றும் ரஞ்சன் கோகோய் ஆகியோர் நீதிபதிகள் நியமன செயல்முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தனித்தனியாக கருத்து தெரிவித்திருந்தனர்.

அரசியலமைப்பு நீதிமன்றத்தின் உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு பரிசீலிக்கப்படும் வேட்பாளரின் ஆளுமையை மதிப்பிடுவதற்கு பொருத்தமான நடைமுறை எது என்பது சம்பந்தப்பட்ட அனைவரின் தகுந்த விவாதத்திற்குப் பிறகு அடையாளம் காணப்பட வேண்டிய விஷயம் என்று நீதிபதி செல்லமேஸ்வர் கூறினார்.

2015 ஆம் ஆண்டில், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை அமைக்கும் அரசியலமைப்புத் திருத்தம் ரத்து செய்யப்பட்டபோது, ​​விசாரணையின் போது எழுப்பப்பட்ட குறைகளை கருத்தில் கொண்டு நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான நடைமுறை குறிப்பாணை திருத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. 2017 இல், அப்போதைய தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், MoP குறித்த அரசாங்கத்தின் பரிந்துரைகளுக்கு பதிலளித்தார். இதன் மூலம், நீதித்துறை அறிவிப்புகளில் கூட MoP "இறுதியாக" கருதப்பட்டது.

இதன் சார்பாக, விவாதத்திற்குப் பிறகு நீதித்துறையின் இறுதிப் பார்வை அனுப்பப்பட்டது, நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான நடைமுறை குறிப்பாணை, உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது, என்று அப்போதைய தலைமை நீதிபதி எஸ் ஏ பாப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏப்ரல் 20, 2021 அன்று ஒரு தீர்ப்பில் கூறியது.

இந்த தீர்ப்பு நீதிபதிகள் நியமனத்தில் அரசுக்கு காலக்கெடு விதித்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment