/tamil-ie/media/media_files/uploads/2017/05/a82.jpg)
Supreme Court of India personal assistant Job notification out
நீதிபதிகள் அனிருத்தா போஸ், ஏ.எஸ். போபண்ணா ஆகியோரை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் மீண்டும் பரிந்துரை செய்துள்ளவுடன் மேலும் இரண்டு பேரை பரிந்துரைத்துள்ளது. இவர்களை தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 31 ஆக அதிகரிக்கிறது.
நீதிபதி அனிருத்தா போஸ், ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், போபண்ணா கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் உள்ளனர். ஏற்கனவே இவர்களின் பெயர்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.
ஆனால், பண மூப்பு உள்ளிட்டவற்றை காரணம் காட்டி இந்த பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்க மறுத்தது. ஆனால், நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் ஏ.எஸ்.போபண்ணா ஆகியோரின் பெயர்களையே கொலிஜியம் மீண்டும் பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.