Advertisment

சட்டம் 370 நீக்கப்பட்ட விவகாரம் : நான்கு வாரத்திற்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு

வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை நவம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Supreme Court Constitution bench headed by NV Ramana

Supreme Court Constitution bench headed by NV Ramana

Supreme Court Constitution bench headed by NV Ramana : ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி அன்று நாடாளுமன்றத்தில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட சிறப்பு அந்தஸ்த்துகளை பாதுகாக்கும் சட்டமான சட்டம் 370 ரத்து செய்யப்பட்டு அறிவித்தார் மத்திய உள்துறை அமைச்சர். பாதுகாப்பு காரணங்கள் கருதி பல முக்கியமான அரசியல் கட்சித் தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது மத்திய அரசு.

Advertisment

370 சட்டப்பிரிவு நீக்கம் தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் பலரும் தாக்கல் செய்து வருகின்றனர்.  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அனைத்து வழக்குகளையும், நீதிபதி என்.வி. ரமணா தலைமையில் அமையும் அரசியல் சாசன அமர்வு விசாரணை செய்யும் அறிவித்தார். தற்போது ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் இன்று முதல் ரமணா விசாரணை செய்கிறார்.

சிறப்பு அந்தஸ்த்து நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்குகளோடு காஷ்மீர் டைம்ஸ் பத்திரிக்கையின் ஆசிரியர் அனுராதா பாஸின், சி.பி.ஐ (எம்) கட்சியின் யூசஃப் தரிகமிக்காக சீதாராம் யெச்சூரி பதிவு செய்த ஆட்கொணர்வு மனு (ஹேபியஸ் கார்பஸ்), குலாம் நபி ஆசாத்தை காஷ்மீரிக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் வைக்கப்பட்ட மனுக்கள் உட்பட அனைத்து மனுக்களும் விசாரிக்கப்பட உள்ளது.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

மக்களவை உறுப்பினரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆட்கொண்ர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதனை விசாரணை செய்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ஃபரூக் அப்துல்லாவை பொது பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ததாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. எனவே இவ்வழக்கை விசாரிக்க இயலாது என்று கூறி நேற்று (30/09/2019) அன்று தள்ளுபடி செய்தார் ரஞ்சன் கோகாய்.

தொலைத் தொடர்பு துண்டிப்பு குறித்து அனுராதா பாஸின் மனு

ஆகஸ்ட் 5ம் தேதி முதல் ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலை தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரிகக் வேண்டும் என காஷ்மீர் டைம்ஸ் பத்திரிக்கையின் ஆசிரியர் மனு தாக்கல் செய்துள்ளார். அதற்கான பதில் இன்னும் அரசிடம் இருந்து வரவில்லை என்று நேற்று நீதிமன்றத்தில் அவர் தரப்பு வழக்கறிஞர் கூறினார். சோலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இது குறித்து கூறுகையில், பதில் மனு ரெடியாகவே உள்ளது. ஆனால் அரசியல் சாசன அமர்வின் முன்பு தான் தாக்கல் செய்ய முடியும் என்று கூறிவிட்டார்.

இந்த வழக்குகள் மட்டுமல்லாமல், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் குறித்து கேள்வி எழுப்பி, குழந்தைகள் நல சமூக செயற்பாட்டாளர்கள் எனாக்‌ஷி கங்குலி மற்றும் சந்தான சின்ஹா உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்துள்ளனர். அதையும் விசாரணை செய்துள்ளார் நீதிபதி என்.வி. ரமணா.

மேலும் படிக்க : பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல்

இன்று நடைபெற்று முடிந்த விசாரணையில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை வழங்கும் சட்டம் 370வதை நீக்கியது தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்த  வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை நவம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment