Advertisment

பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் அக்டோபர் 24ம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல்

தேர்தல்கள் முடிவுற்ற பிறகு மாவட்ட மேம்பாட்டு வாரியம் (District Development Boards (DDBs)) உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Right to access internet a fundamental right, Jammu kashmir, clampdown, 144

Right to access internet a fundamental right`

Adil Akhzer

Advertisment

Jammu Kashmir local council polls : கட்டுப்பாடுகள், ஊரடங்கு உத்தரவுகள், கைதுகளுக்கு மத்தியில் ஜம்மு காஷ்மீரில் அக்டோபர் 24ம் தேதி உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்துகள் ரத்து செய்யப்பட்டு ஜம்மு - காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் ஒரு யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டது. பொது வாழ்வுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்று எண்ணி அம்மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் ஜம்மு காஷ்மீர் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Block Development Council தேர்தல்கள்

பலர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். 250க்கும் மேற்பட்டோர் ரன்பீர் பீனல் கோட் சட்டங்களுக்கு கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ப்ளாக் டெவலப்மெண்ட் கவுன்சிலுக்கான (Block Development Council (BDC)) தேர்தல்கள் நடத்தப்பட்டு அன்றே வாக்குகள் எண்ணப்படும் என்றும் அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஷைலேந்திர குமார் அறிவித்துள்ளார்.

இந்த தேர்தல் முடிவுகளில் பஞ்ச் மற்றும் சர்பஞ்ச்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்கள் சேர்மென்களை தேர்வு செய்வார்கள். அதன் பின்பு மாவட்ட மேம்பாட்டு வாரியம் (District Development Boards (DDBs)) உருவாக்கப்படும். ஒவ்வொரு மாவட்ட மேம்பாட்டு வாரியமும் பி.டி.சி. சேர்மென்களை கொண்டிருக்கும். அதே நேரத்தில் எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்களும் அந்த வாரியத்தில் பங்கேற்பார்கள். பஞ்சாயத் ராஜ் சட்டம் 1989 மற்றும் 1996-ல் உருவாக்கப்பட்ட அதன் விதிமுறைகள் அடிப்படையில் மாவட்டங்களில் மேம்பாட்டு பணிகள் துவங்கும்.

To read this article in English

310 ப்ளாக்குகளில் 172 இடங்கள் பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மற்றும் பெண் வேட்பாளர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் மட்டும் 168 ப்ளாக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 2018ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் 23,629 பன்ச்கள் மற்றும் 3,652 சர்பன்ச்கள் தேர்வு செய்யப்பட்டன. ஆனால் தற்போது காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருக்கும் 61 வார்ட்கள் காலியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. 18,833 வார்ட்களில் 7,596 வார்ட்களில் இருந்து மட்டுமே பன்ச்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2,375 சர்பான்ச்களில் 1,558 சர்பான்ச்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட பன்ச்களில் 3500 நபர்கள் போட்டியை எதிர்கொள்ளாமலே தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : 50% குறைவான பயணிகளை கொண்டிருக்கும் ரயில்கள் இனி இயங்காது… செலவுகளை குறைக்க புது யோசனை!

அனைத்து முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும் கைது செய்யப்பட்டு இருக்கின்ற நிலையில் எவ்வாறு இந்த தேர்தல் நல்ல முறையில் நடைபெறும் என்று கேள்வி எழுப்பப்பட்ட போது, ஏதேனும் அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் பிரச்சனைகள் ஏதுமற்ற முறையில் போட்டியிட விரும்பினால் அதை நாங்கள் நிச்சயம் ஆதரிப்போம் என்று கூறியுள்ளார் ஷைலேந்தர். ப்ளாக் லெவல் தேர்தல்கள் மிக முக்கியம் ஏன் என்றால் அங்கு தான் பல நற்திட்டங்கள் முடங்கியுள்ளது. அதைத் தாண்டி அது வளரவில்லை என்றும் கூறுகின்றனர்.

காவலில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் தலைவர்கள் போட்டியிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்கப்பட்டதற்கு, இது ஒன்றும் அவ்வளவு பெரிய தேர்தல் கிடையாது. அதே போன்று பெரிய அளவில் தேர்தல் பிரச்சாரமும் இதில் நடைபெறாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Jammu And Kashmir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment