Apurva Vishwanath
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியையும், நீதித்துறையையும் விமர்சித்த வழக்கில், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என, தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து மூத்த வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரசாந்த் பூஷன் வழக்கில் நீதியின் கருச்சிதைவை நிறுத்துங்கள் என்று நாடெங்குமிலும் இருந்து 1500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், உச்சநீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோர்ட் அவமதிப்பு அச்சுறுத்தல் நிகழ்ந்துள்ள நிலையில், பார் கவுன்சில் அமைதி காத்துக்கொண்டிருப்பது, நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் வலிமை, மதிப்பு உள்ளிட்டவைகளை குறைத்து மதிப்பிட வழிவகுக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஸ்ரீராம் பஞ்சு, அர்விந்த் தத்தார், ஷியாம் தேவன். மேனகா குரு சுவாமி, ராஜூ ராமச்சந்திரன், பிஸ்வஜித் பட்டாச்சார்யா, நவ்ரோஜ் சீர்வை, ஜனக் துவாரகதாஸ், இக்பால் சக்லா, தாரியஸ் காம்பட்டா, விருந்தா குரோவர், மிஹிர் தேசாய், காமினி ஜெய்ஸ்வால், கருணா நுண்டி உள்ளிட்டோர் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பிரசாந்த பூஷன் ஒரு சிறந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர், அவர் ஒரு சாதாரண நபராக இல்லாமல் இருக்கலாம், அவரது ட்வீட்டர் கருத்துகளும் அசாதாரணவொன்றை வலியுறுத்தவில்லை, அது சமீபகாலமாக நீதிமன்றத்தின் பணி குறித்து பல்வேறு நபர்களால் தொடர்ந்து பொதுவிலும் சமூக ஊடகங்களிலும் வலியுறுத்தப்பட்டு வரும் கருத்துதான். ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பலரும் இதே போன்ற கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்திய பார் கவுன்சிலின் உறுப்பினர்களாகிய நாங்கள், திரு.பிரசாந்த் பூஷனின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்பார அதிர்ச்சியுடன் நோக்குகிறோம். சுயாதீனமான நீதித்துறையென்பது சுயாதீனமான நீதிபதிகளையும் வழக்குரைஞர்களையும் கொண்டது, அதுவே அரசியலமைப்புக்குட்பட்ட ஜனநாயகத்தின் அடிப்படையான சட்டத்தின் ஆட்சியென்பதாகும். பரஸ்பர மரியாதையும் அச்சுறுத்தலின்மையும் தான் நீதிமன்ற அமர்வுக்கும் வழக்குரைஞர்களுக்குமான சுமூகமான உறவுக்கும் அடையாளமாக விளங்குவது. அந்த சமன்பாட்டில் இந்த பக்கமோ அந்த பக்கமோ ஒரு சிறு குலைவு ஏற்பட்டாலும், அது நீதிமன்றத்திற்கும் இந்த நாட்டிற்கும் கடுமையான தீங்கை விளைவித்து விடும்.
இந்த தீர்ப்பை இப்படியே நடைமுறைப் படுத்தக்கூடாது என்ற கருத்தில் நாங்கள் வலுவாக இருக்கிறோம், இந்த வழக்கை இதைவிட பெரிய அமர்வாக, திறந்தவெளி அமர்வாக, பெருந்தொற்றுக்கு பிறகு மறுவிசாரனைக்குட்படுத்த வேண்டும். கடந்த 72 மணி நேரத்தில் இது குறித்து ஒலித்த மக்களின் குரலுக்கு உச்ச நீதிமன்றம் செவி சாய்க்கும் என்றும் நீதி பிறழ்வாமல் இருக்க நடவடிக்கையெடுக்கும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் எப்பொதும் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் மரியாதையையும் மீட்டெடுக்கும் என்றும் நம்புவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook
Web Title:Supreme court court contempt case lawyers judiciary system prashant bhushan prashant bhushan contempt case prashant bhushan guilty
650 அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள்; ஆரம்பமானது சென்னை புத்தகத் திருவிழா!
Tamil News Live : கம்யூ. கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நிலையில் பின்னடைவு!
நெடுமாறன் ராஜாங்கம் ஊருக்கு எப்படி கரெண்ட் வந்தது? வெளியானது நீக்கப்பட்ட காட்சிகள்!
பாஜக தேர்தல் பொதுக்கூட்டம் : இன்று புதுச்சேரி வருகிறார் மோடி!
பாகற்காய் ஃப்ரை.. இப்படி செஞ்சா கசப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை!