Demonetisation Case Order Tamil News: கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி அன்று புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று குறிப்பிட்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதன்பிறகு, புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக விவேக் நாராயண் சர்மா உள்ளிட்ட 57 பேர் டெல்லி உச்சநீதி மன்றத்தில் ரிட் மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. மேலும், அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து, இந்த ரிட் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி ஒத்திவைத்தது.
இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.அப்துல் நஸீா், பி.ஆா்.கவாய், பி.வி.நாகரத்னா, ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் இன்று தீர்ப்பு அளித்தனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கை சரியானதே எனவும் செல்லும் அந்த நடவடிக்கையை திரும்ப பெற முடியாது எனக் கூறி எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தனர்.
மேலும், 6 ஆண்டுகளுக்கு முன்பு 2016-ம் ஆண்டு மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு எடுத்த முடிவை 4:1 பெரும்பான்மையில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உறுதி செய்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று 4 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
அவர்கள் வழங்கிய தீர்ப்பு பின்வருமாறு:-
மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டு இருப்பது பொருளாதார ரீதியிலான கொள்கை முடிவாகும். எனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையை திரும்ப பெறுங்கள் என்று இப்போது உத்தரவு பிறப்பிக்க இயலாது. மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் மத்திய அரசின் செயல்பாடுகளில் எந்தவித குறைபாட்டையும் காண இயலவில்லை.
ரிசர்வ் வங்கியுடன் கலந்து பேசி உரிய முறையில்தான் நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள். எனவே, இந்த விஷயத்தில் மத்திய அரசை குறை கூற இயலாது. மத்திய அரசின் நடவடிக்கை உரிய முறையில் இருப்பதால் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்த 58 மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம். பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும். மத்திய அரசின் நடவடிக்கை ஏற்புடையது என்று இந்த கோர்ட்டு கருதுகிறது.
இந்த நடவடிக்கையில் உரிய இலக்கு எட்டப்பட்டதா என்பதை விசாரிப்பது பொருத்தமானது அல்ல. அரசின் நடவடிக்கைகள் தங்களுக்கு திருப்தி தருகிறது. எனவே, பணமதிப்பிழப்பு நடவடிக்கை விசயத்தில் எந்த புதிய உத்தரவும் பிறப்பிக்கப்படமாட்டாது.
மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஏனோதானோ வென்று உடனடியாக திடீரென்று எடுக்கவில்லை. ரிசர்வ் வங்கியின் மத்திய குழுவுடன் சுமார் 6 மாதங்கள் மத்திய அரசு ஆய்வு செய்திருக்கிறது. போதுமான ஆய்வுகளை செய்த பிறகுதான் மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்து உள்ளது. காரணமே இல்லாமல் பண மதிப்பிழப்பு செய்து உள்ளனர் என்று சொல்வதை ஏற்க இயலாது. எனவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லுபடியாகும்."
இவ்வாறு அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நீதிபதி மாறுபட்ட கருத்து:
இருப்பினும், ‘பணமதிப்பிழப்பு செல்லும் என்பதில் இருந்து மாறுபடுகிறேன்’ என்று நீதிபதி நாகரத்னா தனது மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளார்.
"மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது. அது பிரிவு 26(2) RBI சட்டத்தின் கீழ் இல்லை. சட்டம் இயற்றியே பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருக்க வேண்டும். ரகசியம் தேவையென்றால் அவசர சட்டம் மூலம் கொண்டு வந்திருக்கலாம். நாடாளுமன்றம் என்பது இன்னொரு வடிவம். முக்கியமான நடவடிக்கையில் ஜனநாயகத்தின் மையப்புள்ளியான நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் முடிவெடுக்க முடியாது.
ரிசர்வ் வங்கியின் மனதின் சுயாதீனமான முடிவுகளை எடுக்கவில்லை என்று பதிவுகள் காட்டுகின்றன. நவம்பர் 8, 2016 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு சட்டவிரோதமானது. மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது கேவலமானது. அது நல்ல எண்ணம் என்ற வெளிறிய சந்தேகத்திற்கு அப்பால் உள்ள தொலைநோக்குப் பார்வையை நிரூபிக்கிறது. தேசத்தின் முன்னேற்றத்திற்கான சிறந்த நோக்கங்கள் மற்றும் உன்னதமான பொருள்களைத் தவிர வேறு எதனாலும் உந்துதல் பெற்றதாக எந்த ஆலோசனையும் இல்லை.
ஒவ்வொரு கேள்விகள் பற்றிய எனது கருத்தும், நீதிபதி கவாயின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதிலில் இருந்து வேறுபட்டது. பணமதிப்பு நடவடிக்கையை மத்திய அரசு தொடங்க வேண்டும் என்றால், அத்தகைய அதிகாரம் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் மற்றும் அந்நியச் செலாவணி ஆகியவற்றைப் பற்றி பேசும் பட்டியல் I இன் 36வது பதிவிலிருந்து பெறப்பட வேண்டும். கவாய் ஜே முன்மொழியப்பட்ட தீர்ப்பு, மத்திய அரசால் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று சட்டம் எதிர்பார்க்கவில்லை என்பதை அங்கீகரிக்கவில்லை." என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.