சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக்க வேண்டும் எனக் கோரிய மனுவை ஏற்று விசாரித்து நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது. மேலும், உங்கள் விளம்பரங்களுக்காக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது.
சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்காக் அவந்தது. அப்போது, நீதிபதிகள் விளம்பரத்திற்காக தொடரப்படும் மனு மீது நோட்டீஸ் அனுப்ப மறுத்துவிட்டது.
சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க கோரும் விவகாரம் அரசின் கொள்கை வரம்பில் உள்ளது. அதற்கு அரசியலமைப்புத் திருத்தங்கள் மேற்கொள்ள, நாடாளுமன்றத்தில் விரிவான விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும், நீதிமன்ற அறையில் அல்ல என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
மனுதாரரின் வழக்கறிஞர் சமஸ்கிருதத்தை ‘தாய் மொழி’ என்று கூறினார். அதில் இருந்து மற்ற மொழிகள் உத்வேகம் பெற்றன. அவரது கருத்தை அழுத்தமாகக் கூறுவதற்காக அவர் கீழையியல் அறிஞர் சர் வில்லியம் ஜோன்ஸ் மற்றும் பண்டைய மொழி பற்றிய அவரது ஆய்வை திரும்பத் திரும்பக் கூறினார்.
“பல மொழிகள் சமஸ்கிருதத்தில் இருந்து சொற்களை பெற்றுள்ளது என்பதை நாங்கள் அறிவோம். ஆனால், அதற்காக அதை எங்களால் தேசிய மொழியாக அறிவிக்க முடியும் என்று அர்த்தமல்ல’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு கூறியது.
ஒரு கட்டத்தில், நீதிபதிகள் அமர்வு, மனுதாரரை சமஸ்கிருதத்தில் ஒரு பத்தி பேசும்படி கேட்டுக் கொண்டது. பின்னர், மனுதாரர் ஒரு நிர்வாக உத்தரவின் மூலம் சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக்க வேண்டும் என்று நீதிமன்றத்திடம் வலியுறுத்தினார்.
சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக்க வேண்டும் எனக் கோரிய மனுவை ஏற்று விசாரித்து நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது. மேலும், விளம்பரங்களுக்காக இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் காட்டமாக தெரிவித்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”