திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலைய நிர்வாகத்தை அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் (ஏ.இ.எல்) நிறுவனத்திடம் ஒப்படைத்ததை எதிர்த்து கேரள அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
இந்திய தலைமை நீதிபதி யு.யு.லலித் மற்றும் நீதிபதி பேலா எம். திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு, ஏ.இ.எல் நிறுவனத்துக்கு விமான நிலைய குத்தகையை உறுதி செய்த கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கேரள அரசும், விமான நிலையத்தின் சில ஊழியர் சங்கங்களும் தாக்கல் செய்த சிறப்பு விடுப்பு மனுக்களை தள்ளுபடி செய்தது.
இதையும் படியுங்கள்: அம்மாவின் மருத்துவ பில்கள் முதல் அன்றாடச் செலவுகள் வரை; இயக்குனரின் கட்டணங்களை செலுத்திய ரயில்வே
இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) அதன் நிர்வாகத்தை ஏ.இ.எல் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்ட பிறகு, 2020 அக்டோபரில் ஏ.இ.எல் விமான நிலையத்தை எடுத்துக் கொண்டது.
நவம்பர், 2020 இல், திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை இயக்கவும், நிர்வகிக்கவும் மற்றும் மேம்படுத்தவும் அகமதாபாத்தைச் சேர்ந்த ஏ.இ.எல் நிறுவனத்தை அனுமதித்த கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை கோரி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த சவாலை உயர்நீதிமன்றம் "சரியாக நிராகரித்துவிட்டது" என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. அக்டோபர் 19, 2020 அன்று, உயர் நீதிமன்ற நீதிபதிகள் கே.வினோத் சந்திரன் மற்றும் சி.எஸ் டயஸ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், அதானி குழுமத்திற்கு AAI டெண்டரை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தது, விமான நிலையங்களை தனியார்மயமாக்குவது தொடர்பான நிர்வாகத்தின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறியது, என லைவ் லா நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil