வேட்பாளர்களின் குற்ற வழக்குகளை வெளியிடாத 8 கட்சிகளுக்கு அபராதம் – உச்ச நீதிமன்றம் உத்தரவு

பாஜக, காங்கிரஸ், ஆர்ஜேடி, ஜேடியு, சிபிஐ மற்றும் லோக் ஜன் சக்தி கட்சி ஆகிய 6 கட்சிகள் ஓரளவு இணங்காததற்காக ரூ.1 லட்சம் அபராதமும், சிபிஎம் மற்றும் என்சிபி கட்சிகள் உத்தரவை முழுவதுமாக மீறியதற்காக தலா ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

Supreme Court fines 8 political parties, non-disclosure of criminal cases of candidates, BJP, பீகார் தேர்தல், வேட்பாளர்களின் குற்ற வழக்குகளை வெளியிடாத 8 அரசியல் கட்சிகளுக்கு அபராதம், உச்ச நீதிமன்றம், பாஜக, காங்கிரஸ், ஆர்ஜேடி, சிபிஐ, சிபிஎம், Congress, RJD, JDU, CPI, Lok Jan Shakti Party, were fined Rs 1 lakh for partial non-compliance, Communist Party of India Marxist, Nationalist Congress Party, NCP, supreme court, bihar elections

குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களின் விவரங்களை அளிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறியதற்காக பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட 8 அரசியல் கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அபராதம் விதித்தது.

பீகார் தேர்தலில் வேட்பாளர்களின் பெயரில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை வெளியிடாத 8 அரசியல் கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. இந்த அரசியல் கட்சிகள் அத்தகைய வேட்பாளர்களைப் பற்றி செய்தித்தாள்கள் மற்றும் சமூக ஊடகங்களில் தகவலை வெளியிட அறிவுறுத்தப்பட்டது.

அறிக்கையின் படி, பாஜக, காங்கிரஸ், ராஷ்டீரிய ஜன்தா தளம் (ஆர்ஜேடி), ஐக்கிய ஜனதா தளம், சிபிஐ மற்றும் லோக் ஜன சக்தி கட்சி ஆகிய ஆறு கட்சிகள் ஓரளவு வெளியிடாததற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதனிடையே, உச்ச நீதிமன்ற உத்தரவை முழுமையாக முழுவதுமாக இணங்காததற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) தலா ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலில் போட்டியிடும் தங்கள் வேட்பாளர்கள் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகளுடன் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணங்களையும் அரசியல் கட்சிகள் தங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீதிபதி ரோஹிண்டன் ஃபாலி நாரிமன் தலைமையிலான பெஞ்ச், நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளுடன் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணங்கள் தகுதி மற்றும் தகுதியைக் கருத்தில் கொண்டு நியாயமானதாக இருக்க வேண்டும். அது வெற்றியைக் குறிக்கவில்லை என்று தெரிவித்தனர்.

நீதிமன்றத்தின் அவமதிப்பு மனுவில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவில், அரசியலை குற்றமயமாக்குகிற பிரச்சனையை எழுப்பி, உச்சநீதிமன்றம் 2018 செப்டம்பர் மாதம் அளித்த தீர்ப்பில் வேட்பாளர்களால் தங்கள் குற்றவியல் பின்னணியை வெளிப்படுத்துவது தொடர்பான உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை என்று கூறியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Supreme court fines 8 political parties for non disclosure of criminal cases of candidates

Next Story
காஷ்மீருக்கு வருவது வீட்டுக்கு வருவதைப் போல் உள்ளது – நெகிழ்ச்சி அடைந்த ராகுல் காந்திRahul Gandhi visits Kashmir
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com