'இலவசங்களை' தடை செய்து மத்திய அரசால் உருவாக்கப்படும் சட்டம் நீதித்துறை ஆய்வுக்கு அனுமதிக்கப்படுமா என்று தலைமை நீதிபதி என்.வி ரமணா கேட்டார். “மாநிலங்கள் இலவசங்களை வழங்கக்கூடாது என்று மத்திய அரசு சட்டம் இயற்றுகிறது என்று வைத்துக்கொள்வோம். அத்தகைய சட்டம் நீதித்துறை ஆய்வுக்கு அனுமதிக்கப்படுமா?” அவர் கேள்வி எழுப்பினார்.
இந்தியத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா, அரசியல்வாதிகளின் வாக்குறுதியை ‘இலவசம்’ அல்லது ‘நலத் திட்டம்’ என்று வேறுபடுத்திப் பார்க்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.
தேர்தலின் போது ‘இலவசங்கள் வழங்குவதாக வாக்குறுதி அளிக்கும் கலாச்சாரத்தை’ தடை செய்யக் கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நாட்டின் நலனுக்காக இந்த விவகாரத்தில் விவாதம் தேவை என்று செவ்வாய்க்கிழமை கூறியது. இந்தியத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா, அரசியல்வாதியின் வாக்குறுதியை ‘இலவசம்’ மற்றும் ‘நலத் திட்டம்’ என்று வேறுபடுத்திப் பார்க்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.
‘இலவசங்களை’ தடை செய்து மத்திய அரசு கொண்டு வரும் சட்டம் நீதித்துறை ஆய்வுக்கு அனுமதிக்கப்படுமா என்று தலைமை நீதிபதி கேட்டார். “மாநிலங்கள் இலவசங்களை வழங்கக்கூடாது என்று மத்திய அரசு சட்டம் இயற்றுகிறது என்று வைத்துக்கொள்வோம். அத்தகைய சட்டம் நீதித்துறை ஆய்வுக்கு அனுமதிக்கப்படுமா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதை நீதிமன்றம் விதிவிலக்காக எடுத்துக்கொள்கிறது. தலைமை நீதிபதி ரமணா, திமுக எம்பியும் மூத்த வழக்கறிஞருமான பி வில்சனிடம், “நான் பல விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன். ஆனால், தலைமை நீதிபதி என்ற முறையில், உங்கள் கட்சி அல்லது அமைச்சரைப் பற்றி பேச கூற விரும்பவில்லை.” என்று கூறினார்.
முன்னதாக, தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், இலவசம் வழங்கும் கலாச்சாரம் குறித்த மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து ஊடக விவாதத்தில் பேசுகையில், “எந்த அடிப்படையில்” மாநில அரசுகள் இலவசம் வழங்கும் தங்கள் கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
தலைமை நீதிபதி ரமணா கூறுகையில், “அறிவு என்பது ஒரு நபருக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட கட்சிக்கோ மட்டுமே சொந்தமானது என்று நான் நினைக்கவில்லை. நாமும் பொறுப்புடன் இருக்க வேண்டும். பேசும் விதம், அறிக்கை அளிக்கும் விதம், அதை நாம் கண்டுகொள்ளவில்லை என்று நினைக்காதீர்கள், நாங்கள் கண்களை மூடிக்கொண்டு இருக்கிறோம் என்று நினைக்காதீர்கள்.” என்று கூறினார்.
இதற்கிடையில், ‘இலவசத்துக்கு’ தடை கோரிய மனுதாரர்களில் ஒருவரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் கூறியதாவது: தமிழக நிதியமைச்சர் அளித்த பேட்டிகள் மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கு அவர் பயன்படுத்திய மொழிகள் அனைத்தையும் பார்த்தேன். அது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று நான் நினைக்கிறேன். அவர்களுக்கான இடத்தைப் பெற்றுள்ளனர். அவர்கள் அதை மதிக்க வேண்டும்.” என்று கூறினார்.
இந்த மாத தொடக்கத்தில் கடந்த விசாரணையின் போது, அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அளிப்பதைத் தடுக்க முடியாது என்றும், இலவசம் என்றால் என்ன என்பதை வரையறுப்பது அவசியம் என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது.
“உலகளாவிய சுகாதாரம், குடிநீர் அணுகல் மற்றும் நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வழங்குவது ஆகியவற்றை இலவசங்களாகக் கருத முடியுமா?” என்று இந்திய தலைமை நீதிபதி கேட்டார். தேர்தலுக்கு முன் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் இலவசங்களை வழங்குவதை தடுக்கக் கோரி பாஜக தலைவரும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாய் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"