Advertisment

டெல்லி மதுபான கொள்கை வழக்கு; பி.ஆர்.எஸ் தலைவர் கவிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன்

பி.ஆர்.எஸ் தலைவர் கவிதா 5 மாதங்கள் சிறையில் உள்ளார்; சி.பி.ஐ, அமலாக்கத்துறை விசாரணை நிறைவடைந்தது; ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kavitha brs

பி.ஆர்.எஸ் தலைவர் கே.கவிதா கைது செய்யப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு மார்ச் 11 அன்று புது டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திலிருந்து வெளியே வருகிறார். (எக்ஸ்பிரஸ் புகைப்படம் - பிரவீன் கன்னா)

டெல்லி கலால் கொள்கை ஊழலுடன் தொடர்புடைய பணமோசடி மற்றும் ஊழல் வழக்குகளில் பி.ஆர்.எஸ் தலைவர் கே.கவிதாவுக்கு நிவாரணமாக உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கியது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Supreme Court grants bail to BRS leader K Kavitha in excise policy case

நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, கவிதா ஐந்து மாதங்களாக காவலில் இருப்பதாகவும், இந்த வழக்குகளில் அவருக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ) மற்றும் அமலாக்க இயக்குனரகம் (ED) நடத்திய விசாரணை நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்ததாக, செய்தி நிறுவனம் பி.டி.ஐ தெரிவித்துள்ளது. 

ஊழல் குற்றச்சாட்டுகளை சி.பி.ஐ விசாரித்து வரும் நிலையில், பணமோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

கடந்த மார்ச் 15ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து அமலாக்கத் துறையால் கவிதா கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை ஏப்ரல் 11ஆம் தேதி சி.பி.ஐ கைது செய்தது.

கவிதா தலைமையிலான ஒரு ‘சவுத் குரூப்’ ஆம் ஆத்மி கட்சிக்கு (AAP) குறைந்தபட்சம் ரூ. 100 கோடியை கொடுத்ததாக சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

பார் மற்றும் பெஞ்ச் படி, இரண்டு வழக்குகளிலும் தலா 10 லட்சம் ரூபாய் ஜாமீன் பத்திரத்தை சமர்ப்பிக்குமாறு கவிதாவிடம் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அவர் சாட்சியங்களை சிதைக்கவோ அல்லது நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தவோ கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. கவிதா தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், பி.ஆர்.எஸ் தலைவர் கவிதா விசாரணை நிறுவனங்களுக்கு அறிக்கை அளித்து விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Supreme Court ED Delhi India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment