தற்போது ரத்து செய்யப்பட்ட கலால் கொள்கை ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை (ED) மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) பதிவு செய்த வழக்குகளில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான மணீஷ் சிசோடியா சிறையில் இருந்து வெளியே வர உள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்க: Supreme Court grants bail to Manish Sisodia in excise policy case, to walk out of jail
கலால் கொள்கை வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் அமர்வு ஆகஸ்ட் 6-ம் தேதி தள்ளி வைத்ததது. இந்தநிலையில், சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகிய இரண்டு வழக்குகளிலும் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், 17 மாதங்கள் நீண்ட சிறைவாசம் மற்றும் விசாரணையில் தாமதம் ஆகிய காரணங்களால் பணமோசடி தடுப்பு சட்ட வழக்கின் ‘டிரிபிள் டெஸ்ட்’ அவருக்குப் பொருந்தாது என்று குறிப்பிட்டது. "எங்கள் அனுபவத்தில், விசாரணை நீதிமன்றங்களும் உயர் நீதிமன்றங்களும் ஜாமீன் வழங்குவதில் பாதுகாப்பாக விளையாடுவது போல் தோன்றுகிறது" என்று பெஞ்ச் குறிப்பிட்டது.
முன்னதாக மணீஷ் சிசோடியாவை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி சி.பி.ஐ.,யும், அதே ஆண்டு மார்ச் 9ஆம் தேதி பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் கைது செய்தது. மே மாதம் டெல்லி உயர்நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததை அடுத்து, மணீஷ் சிசோடியா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அக்டோபர் 10 ஆம் தேதி, உச்ச நீதிமன்றம் அவர் மீது அமலாக்கத்துறை சுமத்திய சில குற்றச்சாட்டுகள் குறித்து சந்தேகம் எழுப்பியபோதும் அவரது ஜாமின் கோரிக்கையை தள்ளுபடி செய்தது. வழக்கு விசாரணை முடிவடைந்தால் புதிதாக ஜாமீன் மனு தாக்கல் செய்ய மணீஷ் சிசோடியாவுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஜூன் 4 அன்று, நீதிமன்றத்தின் விடுமுறைக்கால பெஞ்ச் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்களை ஏற்க மறுத்துவிட்டது, பின்னர் ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்தது. விசாரணை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரி உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.