Arvind Kejriwal | Supreme Court: டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சித் (ஏ.ஏ.பி) தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையினரால் கடந்த மார்ச் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் டெல்லி திகார் சிறையில் நீதிமன்ற காவலில் இருந்து வரும் நிலையில், தனது கைதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: SC grants interim bail to Delhi CM Arvind Kejriwal till June 1 in excise policy case
அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்தும், இடைக்கால ஜாமீன் கோரியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நிலுவையில் உள்ளது. தேர்தல் பிரசாரம் செய்வதற்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் அளிப்பது பற்றி 10 ஆம் தேதி (இன்று) தீர்ப்பு அளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த மாதம் (ஜூன்) 1 ஆம் தேதி வரை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 2 ஆம் தேதி சரணடைய வேண்டும் எனவும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜுன் 1-ம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கிய நிலையில் உத்தரவில் உச்சநீதிமன்றம் விதித்துள்ளது முக்கிய நிபந்தனைகள். அவை பின்வருமாறு:-
ரூ.50,000-க்கான பிணைத்தொகை கட்ட வேண்டும்.
முதலமைச்சர் அலுவலகம் செல்லக்கூடாது.
தன்னிச்சையாக எந்த அரசு கோப்புகளிலும் கையெழுத்து போடக்கூடாது.
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்கவோ, வழக்கு விவரம் தொடர்பாக பேசவோ கூடாது.
வழக்கு சம்மந்தப்பட்ட சாட்சிகளிடம் பேசவோ, சந்திக்க முற்படவோ கூடாது.
வழக்கு தொடர்பான ஆவண கோப்புகளை ஆய்வு செய்யவோ, பார்க்கவோ முற்படக்கூடாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“