Advertisment

ஹேமந்த சோரன் ஜாமீன் ரத்து செய்ய கோரிய மனு: உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு

நில மோசடி தொடர்புடைய பணமோசடி வழக்கில் கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் ஜூன் மாதம் ஜாமீனில் வெளிவந்தார்.

author-image
WebDesk
New Update
hemant soren

பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்து, அமலாக்கத்துறை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Advertisment

Read In English: Supreme Court rejects ED plea against bail to Hemant Soren in money laundering case: ‘very well-reasoned order’

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சியின் தலைவரும் ஜார்க்கண்ட் மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன் மீது ராஞ்சியில் உள்ள பர்கெய்ன் பகுதியில் 8.86 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்தியது தொடர்பான அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. ராஞ்சியில் ராணுவத்துக்கு சொந்தமான 4.55 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக வாங்கி விற்பனை செய்துது இந்த வழக்கில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தொடர்பாக ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட நிலையில்,, நிலப் பதிவேடுகளை பொய்யாக்கும் சிண்டிகேட்டின் ஒரு பகுதியாக இருந்ததாகக் கூறப்படும் வட்டார அலுவலகத்தின் வருவாய் துணை ஆய்வாளரான பானு பிரதாப் பிரசாத்திடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் பிரசாத்தின் டெலிபோன் உரையாடல்கள் கைப்பற்றப்பட்டதாகவும்,  பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான பல பேச்சுகள், நிலம் கையகப்படுத்துவதில் மற்றவர்களுக்கு சட்டவிரோதமான பலன்கள் ஆகிய செயல்களுக்கான ஆதராங்கள் காணப்பட்டதாகவும் அமலாக்கத்துகூறியிருந்தது.

"ஹேமந்த் சோரன் நேரடியாக கையகப்படுத்துதல் மற்றும் இந்த நிலத்தின் மூலம் பெற்ற வருவாயைப் பயன்படுத்துதல் ஆகியவற்றுடன் தொடர்புடைய செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளார் என்று கூறப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை, ஹேமந்த் சோரணை கைது செய்து விசாரணை நடத்திய நிலையில், கடந்த மாதம் ஜார்க்கண்ட் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது.

இந்த ஜாமீனை ரத்து செய்ய கோரி, அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இன்று விசாரித்த நிலையில், ஹேமந்த் சோரன்  ஜாமீனில் விடுவிக்கப்பட்டால், அவர் இதேபோன்ற குற்றத்தைச் செய்ய வாய்ப்புள்ளது என்று அமலாக்கத்துறை சார்பில் விவாதம் செய்யப்பட்டது. ஆனால் ஹேமந்த் சோரனின் வக்கீல் மத்திய முகமையால் ஒரு குற்றவியல் வழக்கில் பொய்யாக இணைக்கப்பட்டதாக வாதித்து அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ரோங்கோன் முகோபாத்யாயாவின் ஒற்றை நீதிபதி பெஞ்ச், ஜாமீன் வழங்கும் போது, நீதிமன்றத்தின் பார்வையில், சோரன் மீது குற்றம் சாட்டப்பட்டதில் அவர் "குற்றவாளி இல்லை" என்று "நம்புவதற்கு காரணங்கள் உள்ளன" என்ற என்று கூறியிருந்தது. மேலும் பதிவேடுகளை போலியாக தயாரித்து கையாண்டதன் மூலம் நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்துவதை அதன் சரியான நேரத்தில் நடவடிக்கை தடுத்ததாக அமலாக்கத்துறை  கூறுவது தெளிவற்ற அறிக்கையாகத் தெரிகிறது" என்று கூறி ஹேமந்த் சோரனின் ஜாமீனை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து அமலாக்கத்துறை மனுவை தள்ளுபடி செயத்து.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chief Minister Hemant Soren
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment