scorecardresearch

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 6 பேருக்கு பன்றி காய்ச்சல்

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 6 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய் சந்திரசூட் செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களிடையே பேசும்போது தெரிவித்துள்ளார்.

supreme court judges swine flu, உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு பன்றி காய்ச்சல், உச்ச நீடிமன்ற நீதிபதிகள் 6 பேருக்கு பன்றி காய்ச்சல், நீதிபதி சந்திரசூட், supreme court six judges affected swine flu, swine flu, DY Chandrachud

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 6 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய் சந்திரசூட் செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களிடையே பேசும்போது தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களிடையே உரையாற்றிய உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 6 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை நீதிபதி சஞ்சிவ் கண்ணா வழக்கு விசாரணையின்போது முகமூடி அணிந்திருந்தார். இதனிடையே, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவை சந்தித்து உடன் உச்ச நீதிமன்ற ஊழியர்களுக்கு நோய்த்தடுப்பு மருந்துகள் வழங்க பரிந்துரை செய்தனர்.

மேலும், உச்ச நீதிமன்ற அரசியலமைப்பு அமர்வில் இரண்டு நீதிபதிகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் சபரிமலை வழக்கு விசாரணை நடவடிக்கைகள் மாற்றியமைக்கப்பட்டன.

டெல்லி ஷாஹீன் பாக் வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளில் ஒருவர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தபோதும் அவர் திங்கள்கிழமை அந்த வழக்கை விசாரிக்க வந்திருந்தார். இதனால், அந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Supreme court judges swine flu affected