விஸ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் ஆற்றிய உரையின் செய்தித்தாள் செய்திகளை கவனத்தில் கொண்டதாக உச்ச நீதிமன்றம் செவ்வாய்கிழமை கூறியது.
ஆங்கிலத்தில் படிக்க: Supreme Court takes note of Justice Yadav’s remarks backing UCC at VHP event, seeks details from Allahabad High Court
நீதிமன்ற வளாகத்தில் வி.எச்.பி-யின் சட்டப் பிரிவு ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் உரையாற்றிய நீதிபதி குமார் யாதவ், “நமது சாஸ்திரங்கள் மற்றும் வேதங்களில் தெய்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு பெண்ணை நீங்கள் அவமதிக்க முடியாது. நான்கு மனைவிகளை வைத்திருக்கவோ, ஹலாலா செய்யவோ அல்லது முத்தலாக்கை நடைமுறைப்படுத்தவோ நீங்கள் உரிமை கோர முடியாது. ‘முத்தலாக்’ சொல்ல எங்களுக்கு உரிமை உண்டு, பெண்களுக்குப் ஜீவனாம்சம் கொடுக்கக் கூடாது என்கிறீர்கள்.” என்று கூறினார்.
வி.எச்.பி வெளியிட்ட செய்திக்குறிப்பில், நீதிபதி -பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாகப் பேசினார் என்று குறிப்பிட்டுள்ளது. . “ஒரு நாட்டில் வெவ்வேறு சமூகங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு வெவ்வேறு அரசியலமைப்புகள் இருப்பது தேசத்திற்கு ஆபத்திற்கு குறைவு இல்லை. மனித எழுச்சியைப் பற்றி நாம் பேசும்போது, அது மதத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் மற்றும் அரசியலமைப்பின் வரம்பிற்குள் இருக்க வேண்டும்” என்று அவர் கூறியதாக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அவரது பேச்சின் உள்ளடக்கம் குறித்து சில வழக்கறிஞர் அமைப்புகள் எழுப்பிய ஆட்சேபனைகளின் பின்னணியில் இந்த முன்னேற்றம் வந்துள்ளது.
நீதித்துறை பொறுப்பு மற்றும் சீர்திருத்தங்களுக்கான என்.ஜி.ஓ குடிமக்கள் அமைப்பு செவ்வாய்க்கிழமை, இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு எழுதிய கடிதத்தில், “நீதித்துறைக்கு பொருத்தமில்லாத செயல், ஒரு நீதிபதி தனது உறுதிமொழியை மீறுதல் மற்றும் நீதிபதிகளுக்கான நடத்தை விதிகளை மீறியதற்காக நீதிபதி யாதவ் மீது உரிய நடவடிக்கை எடுக்க உள்நாட்டில் விசாரணை நடத்த வேண்டும்.” என்று கோரியுள்ளனர்.
அந்த கடிதத்தில், “டிசம்பர் 8-ம் தேதி, அலகாபாத் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள உயர்நீதிமன்ற பார் நூலக அரங்கில் நடைபெற்ற வி.எச்.பி-யின் சட்டப் பிரிவின் (காசி மாகாணம்) மாகாண மாநாட்டில் நீதிபதி சேகர் யாதவ் பங்கேற்று பேசினார். இந்தியாவின் முஸ்லீம்களுக்கு எதிரான நேரடி மற்றும் மறைமுகத் தாக்குதல்கள்..." என்று குறிப்பிட்டுள்ளது.
இது, "ஒரு நீதிபதி உறுதிமொழி ஏற்கும் அரசியலமைப்பு லட்சியங்களுக்கு எதிரானது மற்றும் ஒரு எதிர்-பெரும்பான்மைவாத நிறுவனமாக அரசியலமைப்பு நீதிமன்றத்தின் முக்கிய பங்கு" என்று அது மேலும் கூறியது.
“நீதிபதி யாதவ் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மன்னிக்க முடியாத மற்றும் மனசாட்சியற்ற அவதூறுகளைப் பயன்படுத்தினார், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியின் உயர் பதவிக்கு அவமானத்தையும் அவப்பெயரையும் ஏற்படுத்தினார், மேலும், சட்டத்தின் ஆட்சியைக் குறைத்து மதிப்பிட உட்படுத்துவது மட்டுமல்லாமல், அவர் அதை அவர் உறுதிப்படுத்துகிறார்’ என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும், நீதிபதி யாதவின் நடத்தை, "வகுப்புவாதத்துடனும் மற்றும் பாரபட்சமாகவும் இருப்பது மட்டுமில்லாமல், உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்குப் பொருந்தும் வகையில், 1997 ஆம் ஆண்டில் இந்திய உச்ச நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நீதித்துறையின் மதிப்புகளின் மறுசீரமைப்பை மீறுவதாகும்” என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவரும் மக்களவை எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி செவ்வாய்க்கிழமை தனது எக்ஸ் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் யாதவ் மீதான பதவி நீக்க நடவடிக்கைக்கான நோட்டீஸில் நான் கையெழுத்திட்டுள்ளேன். இந்த செயல்முறையை (தேசிய மாநாட்டின் ஸ்ரீநகர் எம்.பி) ரூஹுல்லா மெஹ்தி தொடங்கினார். நீதிபதியின் நடத்தை, உச்ச நீதிமன்றத்தின் ‘நீதித்துறையின் மதிப்புகளை மறுசீரமைத்தல்’ உள்ளிட்ட அரசியலமைப்பு விதிமுறைகளை மீறுகிறது. இந்த நோட்டீஸில் 100 மக்களவை உறுப்பினர்களின் கையொப்பமிட்டுள்லனர் சபாநாயகரால் பரிசீலிக்கப்பட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.